Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2026-2027 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதிற்கு புதிய பதிவுகள் செய்வது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.!!

 
2026-2027 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதிற்கு புதிய பதிவுகள் செய்வது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.!!

895763
895764

மாணவர்களை இளம் அறிவியல்பால் ஈர்க்கும் திட்டமே INSPIRE MANAK விருதுத் திட்டமாகும். இத்திட்டம், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுப்பணிகளை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறது.
 
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் இளம் மாணவர்களில் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்கீழ், பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களின் 5 சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளை பரிந்துரை செய்யலாம். சமுதாயத்திற்கு பயன்மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுமையான திட்டங்களை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள திட்டங்களைவிட எந்தவகையில் மேம்பட்டது என்பதைத் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம் மட்டும்) பரிசுத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த பரிசுத் தொகையைக் கொண்டு மாணவர்கள் தங்கள் திட்ட மாதிரி வடிவங்களை சிறப்புறத் தயாரித்து போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களும் விருதுத் தொகையின் உதவியோடு சிறந்த முறையில் அறிவியல் காட்சிப்பொருட்களைத் தங்கள் அறிவியல் திறனுக்கேற்ப உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
முதற்கட்டமாகத் தனது கருத்துருவை விளக்கமாக www.inspireawards-dst.gov.in இணையதளத்தில் பள்ளி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறும் 10% மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொள்வார்கள். மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பதக்கங்கள் பரிசாக வழங்கப்படும். மாநில அளவிலான அறிவியல் மாணவர்கள், கண்காட்சிகளில் வெற்றிபெறும் மாணவர்களில் 10% புதுடெல்லி புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்துகொள்வார்கள், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறது என்று பார்வை(1) மற்றும் (2)ல் காணும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், பார்வையில் காணும் கடித நகல்கள் இத்துடன் இச்செயல்களுக்கான இணைத்து அனுப்பப்படுகிறது. 
2026-2027ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 15.07.2026 முதல் தொடங்கப்பட்டுள்ள விவரம் ஏற்கனவே பார்வை(3)ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இதற்காக பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் பதிவு செய்ததைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பதிவு செய்யலாம். அதாவது மேல்நிலைப் பள்ளியாக இருப்பின் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 3 மாணவர்களும், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் இருந்து 2 மாணவர்களும் என மொத்தம் 5 மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். உயர்நிலை பள்ளியாக இருப்பின் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 5 மாணவர்கள் பதிவு செய்யலாம். நடுநிலைப் பள்ளிகள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 5 மாணவர்கள் பதிவு செய்யலாம். இதற்காக www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் 15.07.2026 முதல் 15.09.2026 வரை விண்ணப்பிக்க இயலும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மேற்குறிப்பிட்டவாறு. 2026-2027ஆம் ஆண்டிற்கான Inspire Manak Award-க்கு அதிகப்படியான மாணவர்கள் விண்ணப்பிக்க அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவிபெறும் / தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
895765

- 1) பார்வையில் காணும் கடிதங்களின் நகல்கள்

2) குறிப்புகள்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive