ஹிந்து
சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 8,193 கோவில்களுக்கு,
அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன.
அறநிலையத் துறை அறிக்கை: அறங்காவலர் நியமனம் தொடர்பான அறிவிப்பு,
கோவில்களின் விபரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை, www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதியுடைய நபர்கள், விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ, சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி கமிஷனர் அலுவலகங்களுக்கு, ஆகஸ்ட் 20ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...