தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கை எண் 03:2026, நாள் 09.04.2026-இன் படி அறிவிக்கப்பட்ட துறைத் தேர்வுகள் கடந்த 22.05.2026 முதல் 02.06.2026 வரை (27.05.2026 முதல் 29.05.2026 வரை நீங்கலாக)மற்றும் 2106.2026 அன்றும் நடைபெற்ற கொள்குறிவகை, விரிந்துரைக்கும் வகை, கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு அமைப்பு முறையில் சென்னை, புதுடெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன.
இத்தேர்வின் கொள்குறிவகைத் தேர்வுகளின் உத்தேச விடைகள் (Marked as tick) குறிக்கப்பட்ட வினாத்தாள் (தேர்வுக் குறியீடு 006 நீங்கலாக) மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் 21072026 அன்று வெளியிடப்பட்டது.
தேர்வுக் குறியீடு 008 கொள்குறிவகைத் தேர்வின் உத்தேச விடைகள் (Marked as tick) குறிக்கப்பட்ட வினாத்தாள் தேர்வாணைய இணையதளத்தில் இன்று (30.07.2026) வெளியிடப்பட்டுள்ளது.
இத்துறைத் தேர்வெழுதிய (தேர்வுக் குறியீடு 006) விண்ணப்பதாரர்கள் தேர்வின் உத்தேச விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் அதாவது 31072026 முதல் 06.08.2026 அன்று மாலை 5.45 மணிவரை, விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவுச் சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை (ம) அதற்கான ஆதாரங்கள் அடங்கிய தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தங்களுடைய மறுப்பு தகவல் மனுக்களை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது /பரிசீலிக்கப்படமாட்டாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...