டிஎன்பிஎஸ்சி
செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த
குரூப்-4 தேர்வில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில்
உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 4-வது கட்ட அசல் சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆக. 17-ம் தேதி சென்னையில்
நடைபெறுகிறது.
இதற்கான அழைப்பாணையை, தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...