Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.07.2026

டாக்டர் முத்துலட்சுமி 






திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:461

குறள்:
 
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

பொருள்:

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

பழமொழி :

Humility often gains more than pride.

அடக்கம் ஆயிரம் பொன் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன். 

2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.

பொன்மொழி : 

இன்றைய போராட்டம்தான் நாளைய வெற்றிக்கான அடித்தளம்.

Thought for the Day :

Today's struggle is the foundation of tomorrow's success.

பொது அறிவு : 

1. உலகின் மிகப் பெரிய தீவு எது? 

கிரீன்லாந்து

2." தண்ணீர் தேசம்" அல்லது "மிதவை நகரம் " என்றழைக்கப்டும் நகரம் எது? 

வெனிஸ் நகரம்.

English words :

Alert - Quick to notice, விழிப்பான.

Direct - Straight to the point, நேரடியான.

புவியியலும் சுற்றுசூழலும் :

கிராம வளர்ச்சி, சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற விஷயங்கள் குறித்து கிராம சபையில் ஆலோசிக்கப்படுகிறது.
மக்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியும்.

NMMS :

MAT 

2000°C வெப்பநிலையில் ______________________% நீரானது சிதைவடைந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களைத் தருகிறது. 

 (1) 0.02. 

 (2) 0.2. 

 (3) 2. 

 (4) 0.1. 

 விடை: (1) 0.02

ஜூலை 30


டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் பிறந்த நாள்

முத்துலட்சுமி (Muthulakshmi )(சூலை 30, 1886 - சூலை 22, 1968) மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.

நீதிக்கதை

 "அளவான செலவே அமைதியான வாழ்க்கை "

ஒரு சிறிய நகரில் ரமேஷ், லதா என்ற தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ரமேஷுக்கு மாதந்தோறும் கிடை க்கும் வருமானத்தில் குடும்பத்தை சிக்கனமாக நடத்தி வந்தார்.

ஒருநாள் அக்கம்பக்கத்தினர் புதிய கார், விலையுயர்ந்த பொருட்கள் வாங்கியதைப் பார்த்த லதாவுக்கு, "நாமும் அவர்களைப்போல வாழ வேண்டும்" என்ற ஆசை வந்தது. அதனால் தேவையில்லாத பொருட்களை தவணையில் வாங்க ஆரம்பித்தார்கள்.

வீட்டுச் செலவுகளும் அதிகரித்தன. சில மாதங்களில் கடன் பெருகி, மாத இறுதியில் அத்தியாவசிய செலவுகளுக்குக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.

அப்போது ரமேஷின் தந்தை அவர்களிடம், "வருமானத்தை விட அதிகமாகச் செலவு செய்தால் மனநிம்மதியும் போய்விடும். முதலில் தேவைகளைப் பாருங்கள்; பிறகு ஆசைகளை நிறைவேற்றுங்கள்," என்று அறிவுரை கூறினார்.

அந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட ரமேஷும் லதாவும் தேவையற்ற செலவுகளை நிறுத்தி, வருமானத்திற்கே ற்ப செலவு செய்யத் தொடங்கினர். சிறிது சிறிதாக கடன்களை அடைத்து, மீண்டும் நிம்மதியாக வாழ ஆரம்பித்தனர்.

நீதி:

வருமானத்திற்குத் தகுந்தபடி செலவு செய்தால் வாழ்க்கை வளமாகும்.

அகலக்கால் வைத்தால் கடனும் கவலையும் மட்டுமே பெருகும்.

இன்றைய செய்திகள்

30.07.2026

🗒️தொழில் துறையில் AI பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசுடன் கைகோர்த்த சென்னை ஐ.ஐ.டி. சிறப்பு தொழில்நுட்ப மையம்.

🗒️இந்திய மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம்  தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேறியது..

🗒️இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்திய அமெரிக்கா.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலப்பதக்கம் வென்ற சோனம் ஜோடி.

 🏀தைபே ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, தைவானின் வாங் போ வெய் உடன் மோதி வெற்றி பெற்றார்.

Today's Headlines

🗒️ IIT Madras has joined hands with the Tamil Nadu Government to increase the use of AI (Artificial Intelligence) in industries.

🗒️ The Examination Reforms Bill was passed in the Indian Parliament (Lok Sabha) by a voice vote.

🗒️ The United States quickly implemented its plan to impose a 100% tariff on India.

Sports News

🏀 At the ISSF World Cup Shooting, the Sonam pair won a bronze medal.

🏀 At the Taipei Open Badminton Tournament, Indian player Unnati Hooda defeated Wang Po-Wei of Taiwan.

Covai women ICT_போதிமரம்

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive