Special TET Exam 2026
சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்போர் திறனை கண்டறிய புது மாற்றம்
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீசஸ் தேர்வில் பொது
பாட பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. இதற்கான, அறிவிப்பை, மத்திய பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டது.
டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவர் யார்... ஓரிரு நாளில் அறிவிப்பு?
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், வரும் 12ம் தேதியுடன்
முடிகிறது. எனவே, புதிய தலைவர் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில்
வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்படையான செயல்பாட்டால் டி.என்.பி.எஸ்.சி., மீது நம்பிக்கை
சென்னை பல்கலை மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தின், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.
வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்களை சேர்க்க சிறப்பு முகாம்
ஆங்கிலத் தேர்வில் முறைகேடு: 37 மாணவர் சிக்கினர்
தமிழகத்தில் நேற்று நடந்த, பிளஸ் 2 ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், 37
மாணவர்கள், பிட் அடித்து, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். ஏற்கனவே
நடந்த தமிழ் முதற்தாள் தேர்வில், ஆறு பேரும்; இரண்டாம் தாள் தேர்வில், 11
பேரும்; பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டு, அன்றைய தேர்வில் இருந்து
நீக்கப்பட்டனர்.
IGNOU- B.Ed
IGNOU - B.ED ASSIGNMENTS 2013 - DOWNLOAD
IGNOU I YEAR SOLVED ASSIGNMENTS JAN-2013
ES - 33 1
|
|
ES-332
|
|
ES -333
|
|
ES-341
|
|
5-ம் வகுப்பு மாணவர்களிடம் தமிழ் வாசிப்புத் திறன் இல்லை
ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 20
சதவிகிதம் பேரிடம் தமிழ் வாசிப்பு திறன் இல்லை என செஞ்சியில் நடைபெற்ற
வாசிப்புத்திறன் குறித்த விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டத்தில் மாநில
தொடக்கக்கல்வி இணை இயக்குநர்
லதா வேதனையுடன் தெரிவித்தார். இந்நிலைக்கு
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களே பொறுப்பாவர். வாசிப்புத்திறனை
மேம்படுத்தாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
எச்சரித்தார்.
கல்வித்துறை இயக்குனர்கள் அனைவரும், முக்கிய பாட தேர்வுகளை கண்காணிக்க, பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்
வரும், 11ம் தேதி முதல் நடக்க உள்ள, பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகளை,
கல்வித்துறை இயக்குனர்களும், நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என,
பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள்
மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரண்டாவது
கட்டமாக, கல்வியில் பின்தங்கியுள்ள, 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப்
பள்ளிகள், வரும் கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளன. கட்டடப் பணிகள் இன்னும்
துவங்காததால், தற்காலிகமாக, அரசுப் பள்ளிகளில், மாதிரிப் பள்ளிகள் இயங்கும்
என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குரூப்-2: 230 பதவிகளுக்கு 4ம் கட்ட கலந்தாய்வு
கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வு நடந்தது. இந்த
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மூன்று கட்டமாக நடந்தது.
இதில் 2,941 பேருக்கு பணி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன . மேலும் 230 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டலிஜென்ஸ் டெஸ்டில் ஐன்ஸ்டீனை முந்திய இந்திய சிறுமி
இன்டலிஜென்ஸ் டெஸ்டில், பிரபல விஞ்ஞானிகள், ஐன்ஸ்டீன்
மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை முந்தி 12 வயது இந்திய சிறுமி சாதனை
படைத்துள்ளார்.
9 பல்கலைகளுக்கு நவரத்தினா அந்தஸ்து: ரூ.300 கோடி கூடுதல் மானியம்
பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) சார்பில் அளிக்கப்படும், நவரத்தினா
பல்கலை அந்தஸ்து பெற, தமிழகத்தில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. தேர்வு
செய்யப்படும் ஒன்பது பல்கலைகளுக்கு, தலா, 300 கோடி ரூபாய், கூடுதல் மானியம்
கிடைக்கும்.
தேர்ச்சி பெற்றும் பணியில்லை: தாவரவியல் பட்டதாரிகள் தவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்திய போட்டி
தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல்,
தாவரவியல் முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்
விழுப்புரம் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
விழுப்புரம் மந்தக்கரை புதுத்தெரு பகுதியில் உள்ள செயின்ட்
ஜான் மாற்றுதிறனாளிகள் மேல்நிலை பள்ளியில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை
மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
ஆய்வக பயிற்சியில் மாணவி காயம்: 2 பேர் மீது வழக்கு
செஸ் போட்டியில் மாணவர் சாதனை
செஸ் போட்டியில், அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து அரியலூர் மான்ஃபோர்ட் மெட்ரிக்.,
மேல்நிலைப்பள்ளி சார்பில் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம்,
மன்னார்குடியில் கடந்த, 2ம் தேதி, மாநில அளவிலான செஸ் போட்டிகள்
நடைபெற்றது. இதில் 7, 9, 11, 13, மற்றும் 17 வயதுக்குட்பட்டோருக்கான
சதுரங்க போட்டிகள், ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது.
முதுநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் நியமனம் வழங்கப்பட்டது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்
பெறுவதற்கான கலந்தாய்வு செவ்வாய்க் கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
ஆன்லைன் மூலமாக தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் கலந்தாய்வுகள்
நடத்தப்பட்டன.
2011 - 12 ஆண்டிலும் அதற்கு முந்தைய
ஆண்டுகளிலும் உருவான 700 காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
முதலில் உள் மாவட்டங்களில் பணி பெறுவதற்கான கலந்தாய்வும், பிறகு பிற
மாவட்டங்களில் பணி பெறுவதற்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டது. மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வுகள்
நடத்தப்பட்டன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் M.Com. (Financial Management), M.Com. (Bank Management), M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management) and B.Com. (கம்ப்யூட்டர் Application) ஆகிய பட்டப்படிப்புகள் B.Com., மற்றும் M.Com., பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வுக்கு அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களை சிறப்பு பார்வையாளராக மாவட்ட வாரியாக நியமித்து தேர்வுத்துறை உத்தரவு.
மேல்நிலைத் தேர்வில் அதிக முக்கியத்துவம்
வாய்ந்த கணிதம், இயற்பியல், வேதியியல், உயரியியல், தாவரவியல் மற்றும்
விலங்கியல் ஆகிய ஆறு பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும் நாட்களில் தேர்வு
மையங்களை கண்காணித்திட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டைகளைப் போலவே
இவ்வாண்டும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மற்றும் மாவட்டக் கல்வி
அலுவலர்களும் வருகின்ற பேராசிரியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க
அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
7வது சம்பள கமிஷன் அமைக்க திட்டமா?
7வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில்
இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதித்துறை
இணையமைச்சர் நமோ நாராயன் மீனா லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த
பதிலில்ல 6வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் ஜனவரி 2006 1ம் தேதி முதல்
அமல்படுத்தப்பட்டுள்ளது, 7வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை
உள்ளது. ஆனால் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சம்பள கமிஷன்
அமைக்கப்படுகிறது என கூறினார்.
10ம் வகுப்பு கணித வினாத்தாளில் மாற்றம்: 100/100 அள்ளலாம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித வினாக்கள் அமைப்பில், இந்தாண்டு
தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தாண்டு கணிதத்தில்
"நூற்றுக்கு நூறு" மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை
அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
10ம் வகுப்பு தனி தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொது தேர்வை, தனி தேர்வாக எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க
தவறிய மாணவ, மாணவியர், தத்கால் திட்டத்தில், 6,7ம் தேதிகளில், இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.







