முன்னதாக, கடந்த நவம்பர் 4-ம் தேதி வீடு வீடாக கணக்கீட்டுப்படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. கணக்கீட்டுப்படிவம் விநியோகித்தல், பூர்த்தி செய்து பெறுதல் மற்றும் பதிவு செய்யும் பணிகள் ஆகியவை டிச.4-ம் தேதி முடிவடைய இருந்தது.
ஆனால், இதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, கணக்கீட்டு படிவம் பெறுவதற்கான அவகாசம் டிச.11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டு வந்தது. மேலும், அத்துடன், கணக்கீட்டுப்படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
டிச.11-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகிக்கும் பணி, பூர்த்தி செய்து பெற்ற படிவங்களைப் பதிவேற்றும் பணி ஆகியவை 100 சதவீதம் முடிந்ததாக அறிவிக்கப்பட் டிருந்தது.
இந்நிலையில், இறந்தவர்கள், இரட்டை பதிவுகள், முகவரி மாறியவர்கள் விவரங்களை இறுதி செய்வதில் சிக்கல் எழுந்ததால், டிச.11-ம் தேதி மாலை இந்திய தேர்தல் ஆணையம், கணக்கீட்டுப் படிவம் விநியோகம், திரும்பப் பெறுதல், பதிவு செய்தல் பணிகளுக்கு மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் அதாவது, டிச.14-ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.
இதன் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19-ம் தேதி (இன்று) வெளியாக உள்ளது. இன்று முதல், ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். அதன்பின், அவற்றின் மீது பரிசீலனைகள் நடைபெறும்.
சென்னை தலைமைச்செயல கத்தில், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று பிற்பகல் 2 மணிக்கு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார். தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்படுகிறது. வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதள பக்கத்தில் தங்கள் விவரங்கள் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...