கடந்த பொதுத் தேர்வில் அனுமதிக்கப்பட்ட 'ஸ்கிரைப்' மாணவர்களின் உண்மைத் தன்மை ஆய்வு செய்யாமல் அனுமதிக்கப்பட்டதாகவும், திட்டமிட்டு சிலர் 'ஸ்கிரைப்' ஆக பங்கேற்றதாகவும் சர்ச்சை எழுந்தது. அடுத்தாண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்வுக்கு பிளஸ் 2வில் 236, பத்தாம் வகுப்பில் 382 பேர் 'ஸ்கிரைப்' கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் சி.இ.ஓ., தயாளன் தலைமையில் நடந்தது. தேர்வுத்துறை உதவி இயக்குநர் பிரதீபா, உதவித் திட்ட அலுவலர் சரவணமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூர்யகலா பங்கேற்றனர்.
இதில், கல்வி ஒன்றியம் வாரியாக 15 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் உள்ளடக்கிய கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர், தலைமையாசிரியர், சிறப்பு பயிற்றுனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு மாணவர்களின் மருத்துவ ஆவணங்கள், மாற்றுத்திறன் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். மாவட்டங்களில் 'ஸ்கிரைப்' மாணவர் உண்மை தன்மையை ஆய்வு செய்ய முதன்முறையாக குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...