தேசிய
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி.,யில், 50
சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டு
உள்ளன.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது, பாடத்திட்டங்களை உருவாக்குவது, புத்தகங்கள் அச்சிடுவது உள்ளிட்ட பணிகளை என்.சி.இ.ஆர்.டி., செய்கிறது.
இதன் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு, ஏ, பி, சி என, மூன்று நிலைகளில் மொத்தம், 2,844 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 1,219 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். மீதமுள்ள 1,625 பணியிடங்கள் காலியாக உள்ளன.
அவற்றில் பெரும்பாலான பணியிடங்களுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் கேள்விக்குறியாகி உள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...