Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்டெர்நெட் ஃபில் அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த







 

          இன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா ? சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜி‌பி ,1 ஜி‌பி .500 எம்‌பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் ? மீதம் எவ்வளவு உள்ளது ? என்று தெரியாமல் பயந்து... பயந்து ....பயன்படுத்துவார்கள் இனி அந்த பயம் வேண்டாம் .......அதற்கு அருமையான முற்றிலும் இலவசமாக சாப்ட் வேர் உள்ளது ...


.அதன் பெயர் Net speed monitor இது உங்கள் கம்ப்யூட்டர் இன்டெர்நெட் உடன் தொடர்பு ஆகும் போது தானாகவே கண்காணித்து மாத ,நாள் வாரியாக வைத்திருக்கும் தேவைப் படும் போது பார்த்து அளவறிந்து பயன்படுத்தலாம் .....இதை டவுன் லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யுங்கள்


டவுன்லோட் செய்த file  winrar கொண்டு extract    

செய்து இன்ஸ்டால் செய்தபிறகு உங்கள் கம்ப்யூட்டர் டாஸ்க் பார் அதாவது கீழே உள்ள நீல நிற பட்டை அதில் வலது மூலையில் படத்தில் உள்ளவாறு ஒரு icon வந்திருக்கும் 

அதில் U 0.00. D ;0.00 ( upload,download ) கம்ப்யூட்டர் இன்டெர்நெட் உடன் தொடர்பு ஆகும் போது நம்பர் ஓட ஆரம்பிக்கும் இது சிலருக்கு காட்டவில்லை என்றால் படத்தில் கீழே 1, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து 2. tool bar செலக்ட் செய்து வரும் விண்டோவில் net speed monitor டிக் பன்னுங்கள்  இப்போது icon தெரியும் . படத்தை பார்க்கவும்

நமது பயன்பாட்டை பார்க்கும் முறை ......



TEACHERS SALARY CHANGE READY RECKONER


DEPARTMENTAL EXAMINATION MAY 2013 - TNPSC NOTIFICATION




List of Current Notifications-  click here for Instructions to Candidates
S No. Advt. No./ Date of Notification Notification Online Registration Date of Examination Activity
From To
1
 
15.03.2013
Deptl.Exam May'2013
15.03.2013 15.04.2012 24.05.2013 to
31.05.2013
Apply Online



01.06.2013 தேதிவரை தொடர்ந்து ஒரே ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களின் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு


          01.06.2013 தேதிவரை தொடர்ந்து ஒரே ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களின் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு . 
 
 

பள்ளி துவங்கும் முன்பாகவே ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு?


          ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர்.

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


    அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களைப் போலவே, உயர் தரத்தில், துறைத் தேர்வு பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், தேர்வு எழுதுவோர், இனி அதிக கவனத்துடன் படித்து எழுத வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன. 
 

பள்ளிகளில் மாணவிகள் நடனமாட தடைவிதித்த பஞ்சாயத்து


        அரியானாவைச் சேர்ந்த, பஞ்சாயத்து அமைப்பு, தங்கள் பகுதிகளில் நடக்கும் பள்ளி விழாக்களில், மாணவியர் நடனமாடுவதற்கு தடை விதித்துள்ளது.

ஜி.ஏ.டி.இ., தேர்வு முடிவுகள் வெளியீடு - பயோடெக்னாலஜியில் தஞ்சை மாணவி முதலிடம்


         ஐ.ஐ.டி.,க்களில், எம்.டெக்., படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வு(கேட்) முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.


சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும்


          சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார், பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த இளைஞர் ஒருவர். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நடத்திய பி.ஏ., தேர்வில் முதல் ரேங்க் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார், இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.

162 புதிய பி.எட்., கல்லூரிகள் துவங்க விண்ணப்பங்கள்: துணைவேந்தர்


          தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 162 பி.எட்., கல்லூரிகள் துவக்க, விண்ணப்பங்கள் வந்துள்ளன என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் - 360 கோடி ஒதுக்கீடு


         தமிழகத்தில், 14,130 பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு, 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

வணிகவியல் தேர்வு வினாத்தாளில், பல இடங்களில் எழுத்து பிழைகள் இருந்தன - Dinamalar


          தமிழகம் முழுவதும் நடந்த வணிகவியல் தேர்வு வினாத்தாளில், பல இடங்களில் எழுத்து பிழைகள் இருந்தன. விடைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய வினாக்களில், நான்கு விடைகளுக்கு பதில், மூன்று விடைகள் மட்டும் இடம் பெற்றிருந்தன. இது, மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்திய வைரங்கள் கல்வி நிறுவனம்


             கடந்த 1978ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய வைரங்கள் கல்வி நிறுவனம், வைரங்கள், ரத்தினங்கள் மற்றும் தங்க நகைத் துறையில் ஆராய்ச்சி மற்றும் படிப்பகளை வழங்கும் ஒரு பிரதான நிறுவனம்.


கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு


        கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

10 கோடி மக்கள் பேசப்படும் மொழிகள் எத்தனை தெரியுமா?

 

         உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.
 

மத்திய அரசு பணியாளர் தேர்வு முறை மாற்றங்கள் நிறுத்தம்


          மத்திய அரசுப் பணியாளர் தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
               மத்திய அரசு பணியாளர் தேர்வு முறையில் மாநில மொழிகளைப் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

குரூப் 1 தேர்வில் வென்ற ஆசிரியருக்கு பாராட்டு


               குரூப் 1 தேர் வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் செல்வம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணைஆட்சியர் பணிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
 

தமிழகம் முழுவதும் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறை


         இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கால வரம்பற்ற விடுமுறை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பிளஸ் 2 கணிதம்: ஆசிரியர், மாணவர் சொல்வது என்ன


        "பிளஸ் 2 கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான உணர்வை தரவில்லை" என ஆசிரியர்கள், மாணவர்கள் கூறினர்.


பிளஸ் 2 கணிதம்: ஆங்கில வழி தேர்வர்கள் அதிருப்தி


        பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர். கணக்கு வினாத்தாள் கடினமாக இருப்பதாக கூறி, பல தேர்வு மையங்களில், ஆங்கில வழி மாணவியர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.


பிளஸ் 2 கணிதத் தேர்வு கடினம்; மாணவர்கள், ஆசிரியர்கள் கவலை


         பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப் பாட தேர்வு, கடினமாகவும், எதிர்பார்க்காத கேள்விகள் சில கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், ஆசிரியர்கள், கருத்து தெரிவித்தனர். இதனால், கணிதத்தில், நூற்றுக்கு நூறு எடுப்பவர்கள் எண்ணிக்கை சரிவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும், கணித ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.


டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும் தமிழ் மொழிக்கு பின்னடைவு


       சிவில் சர்வீஸ் தேர்வைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும், தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இது, கிராமப்புற தேர்வர்களுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவின் மாநில வாரியான பல்கலைக்கழக விபரங்கள் (2012ம் ஆண்டின் படி)


இந்தியாவின் மாநில வாரியான பல்கலைக்கழக விபரங்கள் (2012ம் ஆண்டின் படி)


உலகத்தரம் வாய்ந்த கல்விநிறுவனம் அமைவதில் உள்ள சிக்கல்


          பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா அளித்த சிறப்புப் பேட்டி:

கல்வி மேம்பாட்டை பொறுத்தே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைகிறது.  எனவேதான், அனைத்து நாடுகளும் கல்விக்கு முக்கியத்துவம் தருகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் உயிர்கல்வி கற்போர் விகிதம் 50 முதல் 80 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் உயர்கல்வி கற்போர் 12 சதவீதம் மட்டுமே.


TET Study Material

TET Study Materials - 1st Schedule

Study Materials - 1


Tamil

 Child Devolopment & Pedagogy

Paper 1 Model


Paper 2 Model

டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும் தமிழ் மொழிக்கு பின்னடைவு


        சிவில் சர்வீஸ் தேர்வைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும், தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இது, கிராமப்புற தேர்வர்களுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஐ.ஏ.எஸ். தேர்வில் புதிய கட்டுப்பாடு: முதல்வர் எதிர்ப்பு


         ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

மாநிலம் முழுவதும் 1000 தொடக்க பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி


              தமிழகம் முழுவதும் 1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி முறையை கொண்டுவருவதற்கு பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 2010-11ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.
 
 

தபால் மூலம் வாக்காளர் அட்டை: தேர்தல் கமிஷன் ஏற்பாடு


      தபால் மூலம் அடையாள அட்டையை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ள, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

 

"பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி., விருப்ப பாடமாக சேர்க்க முடிவு"


       "பள்ளி, கல்லூரிகளில், என்.சி.சி., விருப்ப பாடமாக சேர்க்கப்படும். என்.சி.சி., மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பில் சலுகை மதிப்பெண் வழங்கப்படும்" என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு தெரிவித்தார்.

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உத்தரவு


               "தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிந்து, ஒளி-ஒலி காட்சி மூலம் கற்பிக்க வேண்டும்" என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


           தூத்துக்குடி டாக்டர் விஜயரங்கன் தாக்கல் செய்த பொது நல மனு: கற்றலில் குறைபாடுள்ள (டிஸ்லெக்சியா) மாணவர்களால் சரளமாக, சத்தமாக பேச முடியாது. புதிய வார்த்தைகளை கற்க முடியாது. உயர்கல்விக்குச் செல்லும் போதும், அதே நிலை நீடிக்கிறது. இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. 

சி.ஏ., தேர்வு இலவச பயிற்சி மையம்: மதுரையில் மார்ச் 20ல் துவக்கம்


     மதுரையில், சி.ஏ., தேர்வுக்கான இலவச பயிற்சி மையம், மார்ச் 20 முதல் செயல்பட உள்ளது. 

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான மாற்றங்களை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலும் மாற்றம்


         தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-1, குரூப்-1ஏ, 1பி, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் மற்றும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கான தமிழ் பாடத்திட்டத்தினை முற்றிலும் மாற்றி அமைத்து புதிய பாடத்திட்டத்தினை டி.என்.பி.எஸ்.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 

UPSC, TNPSC மற்றும் TET உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலையில் படித்தவர்கள் அதிகளவில் அரசு பணிகளுக்கு தேர்வு



         யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., டி.இ.டி., உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தோர் அதிகளவில் தேர்வாகி உள்ளனர்" என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
 
 

பிளஸ் 2 இயற்பியல் எளிமை; பொருளாதாரம் கடினம்


          பிளஸ் 2 பொதுத்தேர்வில் நேற்று நடைபெற்ற இயற்பியல் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கு இயற்பியல் முக்கியப் பாடமாக கருதப்படுகிறது.
 

பிளஸ் 2 தேர்வு: நாமக்கல், ஈரோட்டில் கூடுதல் கண்காணிப்பு


          பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களுக்கான தேர்வு துவங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் அதிகம் நிறைந்துள்ள நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை கண்காணிக்க, கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பின் தங்கிய மாணவர்கள் இடைநிறுத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு "கிடுக்கிபிடி"


         10ம் வகுப்பு தேறாத மாணவர்களை "ஆப்சென்ட்" ஆக்கும் திட்டத்திற்கு தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிபிடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
 

முன்னதாகவே வழங்கப்பட்ட பிளஸ் 1 வினாத்தாள்கள்: கல்வித் துறை அதிகாரிகள் திடீர் சுறுசுறுப்பு


       நெல்லை மாவட்டத்தில் மொத்தமாக பிளஸ் 1 வினாத்தாள் சப்ளை செய்யப்பட்டதை தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் "திடீர்" சுறுசுறுப்பு அடைந்தனர்.
 
 

மேல்நிலை வரைவு பாடத்திட்டம்: ஏப்ரலில் இணையத்தில் வெளியீடு


      பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான வரைவு பாடத்திட்டம், அடுத்த மாதம், இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
 

6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு "English Communication Skill" பயிற்சியினை/ பரிசுகளை SCERT மற்றும் SSA இணைந்து அளிக்க திட்டம்

          6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர்  மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்த மாவட்டத்திற்கு 60 பள்ளிகளில் 2500 மாணவர்களுக்கு "English Communication Skill" பயிற்சியினை/ பரிசுகளை  SCERT மற்றும்  SSA இணைந்து அளிக்க திட்டம் ..

பத்திர பதிவு எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம்


             பத்திரப் பதிவு ஆவணங்கள் எழுதுவோர், தமிழ் மொழியை, முதல் பாடமாக அல்லது இரண்டாவது பாடமாக படித்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் நான்கு வகை கட்டணம் வலியுறுத்தல்


         "அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நான்கு வகை கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள், கட்டண நிர்ணயக்குழு தலைவரிடம், நேற்று மனு கொடுத்தனர்.

 
 

இயற்பியலில் 100 சதவீத மதிப்பெண் பெறுவது சிரமம்



        பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண் கேள்விகள் சிரமமாக இருந்ததால், அதிகம் பேர் நூற்றுக்கு நூறு பெறுவது சிரமம். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளை விட, இந்தாண்டு கேள்விகள் எளிதாக இருந்தன.

இமாச்சலில் கல்லூரி மாணவிகளுக்கு பெண் போலீஸ் பாதுகாப்பு


      "இமாச்சல பிரதேசத்தில், கல்லூரி மாணவியரின் பாதுகாப்பிற்காக, ஒவ்வொரு மகளிர் கல்லூரியிலும், பெண் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்" என, அம்மாநில முதல்வர் வீர்பத்திரசிங் கூறினார்.


சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள்


      மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில் 15 நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.
 
 

ஆசிரியர்கள் அம்மாவாக வேண்டும்!

 
           படிப்பு சுமையாகிவிட்ட இக்காலத்தில், அதைச் சுவையாக்குவது எப்படி? என்று யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை. பிறந்த குழந்தைக்கு 3 வயது எப்போது ஆகும் என்று காத்திருக்கும் பெற்றோர், எங்கேயாவது பள்ளியில் தள்ளி விட்டு விட்டு அவசர அவசரமாக வேலைக்கு ஓடும் காலம் இது. எனவே  குழந்தைகளின் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சி அத்தனைக்கும் பொறுப்பு, பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள்தாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்ப்பு



          மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் முறையாக அறிவிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படியானது, ACPIN-ன் குறியீட்டு கணக்கின் படி 8% ஆக இருக்கும் எனவும், ஜனவரி 2013 முதல் கணக்கீட்டு வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 

ஐ.ஏ.எஸ்., தேர்வை இனி தமிழில் எழுத முடியாது!



           ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய விதிகளை அறிவித்துள்ளது.


சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை



          இங்கிலாந்தின் "டைம்ஸ் ஹையர் எஜுகேசன்" என்ற வார இதழ், ஆண்டுதோறும் சர்வதேச கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலை வெளியிடுகிறது. 2013ம் ஆண்டுக்கான பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 

புதிய ஓய்வூதிய திட்டத்தில் 47 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை


       புதிய ஓய்வூதிய திட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த 47 ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. 2003 ஏப்.1க்கு பிறகு பணியில் சேரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 

முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடாததால் பெற்றோர் கவலை


            பெரும்பாலான மாவட்டங்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தவிர்த்து, இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படவில்லை. இதனால், கோடை விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பெற்றோர், கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


பிளஸ் 2 முதன்மைத் தேர்வுகளை கண்காணிக்க 4,000 பேர்!


           தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழிப்பாடங்களில், 43 மாணவர்கள், "பிட்" அடித்து பிடிபட்டனர்.


துவக்கப் பள்ளி மாணவர் வாசிப்புத்திறன் குறைவு: இணை இயக்குனர் ஆய்வில் அதிர்ச்சி - Dinamalar


           "துவக்கப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை, ஏப்ரல் மாதத்துக்குள் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என, தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் வெளிநாடு செல்ல பல்கலைக்கு தலா ரூ.20 லட்சம்: அமைச்சர் பழனியப்பன்


         ""வெளிநாடு சென்று, மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள, ஒவ்வொரு பல்கலைக்கும் ஆண்டுதோறும் தலா 20 லட்ச ரூபாய் அரசு ஒதுக்குகிறது,'' என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.

சிலம்பம்: அரசு பள்ளி மாணவன் சாதனை


                திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர், சிலம்பத்தில் பதக்கங்களை குவித்துள்ளார்.


பள்ளி மாணவர்களுக்கு காப்பீட்டு திட்டம் கிடைக்குமா?


         கேந்திர வித்யாலயா பள்ளிகளை போல், தமிழக பள்ளி மாணவர்களுக்கும் காப்பீடு (இன்சூரன்ஸ்) திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற, எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.


உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் கைது


        சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.மேலும் உண்ணாவிரத பந்த‌லுக்கும் சீல் வைக்கப்பட்டது.


வானவில் ஔவையார் எழுத்துருவை பயன்படுத்தி தட்டச்சு செய்ய எளிய வழி


          தமிழக அரசு அலுவலகங்களிலும், கல்வித்துறையிலும் அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புகள் மற்றும் டாக்குமென்ட்களில் வானவில்-ஔவையார் எழுத்துரு பயன்படுத்தப்படுகிறது.
          இது ஒரு தனியார் நிறுவனத்தின் எழுத்துரு ஆகும். இதனை தட்டச்சு செய்ய அவர்களது நிறுவனத்தின் மென்பொருளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பொதுவாக இந்த மென்பொருளை வாங்குவதற்கு என்று அரசு அலுவலகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. இதனால் அரசு அலுவலகங்கள் கிராக் செய்யப்பட்ட மென்பொருளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. கிராக் செய்யப்பட்ட மென்பொருளும் வின்டோஸ் 7 இயக்கச்சூழலில் வேலை செய்வது இல்லை.

வேறு இலவச மாற்று வழி இருப்பின் அரசு அலுவலகங்களுக்கு மிகவும்பயனுடையதாக இருக்கும். என்.எச்.எம் ரைட்டர் இதற்கு மிகப் பெரிய தீர்வாக அமைந்துள்ளது. (ஆமாம்! யுனிகோடுக்கு மாற வேண்டியது தானே!)

என்.எச்.எம் ரைட்டரை வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சு செய்ய பயன்படுத்துதல்.

TPF to GPF Proposal - Always Available our Padasalai Site in Forms & Proposals Tab


           அன்புள்ள ஆசிரியர்களே நீங்கள் முன்னதாக TPF இல் இருந்து தற்போது GPF இல் தொடர விரும்புகிறீர்களா? 

இதோ உங்களுக்காக மிக அறிய Proposal 




"மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்"


     "மக்களிடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்" என கருத்தரங்கில் தெரிவிக்கப்ட்டது.


வறுமையே தடைக்கல்லாய் முன் நிற்கிறது


           கால்பந்தாட்ட போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி சாதிக்கத் துடிக்கும், சேலம் மாணவிக்கு பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவிக்கரம் தேவைப்படுகிறது.

அமெரிக்காவில், 106 வயது மூதாட்டி, தன் பள்ளி சான்றிதழை, பல ஆண்டுகளுக்கு பின் பெற உள்ளார்.



        அமெரிக்காவில், 106 வயது மூதாட்டி, தன் பள்ளி சான்றிதழை, பல ஆண்டுகளுக்கு பின் பெற உள்ளார்.



மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .




(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்)))

           நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive