NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1000 ரூபாய்க்கு ஜியோ ஸ்மார்ட்போன்; அடுத்த ஆஃபர் ரெடி

Image result for smartphone jio
        ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது.

குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சிம்மை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. 3 மாதங்களுக்கு இலவசமாக 4ஜி இன்டர்நெட் சேவையை மற்றும் வாய்ஸ்கால்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டதால் ஜியோ சிம் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். இதனால், அந்நிறுவனம் குறுகிய நாட்களுக்குள்ளாகவே 25 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றது.


ஜியோவின் வருகை தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இது போட்டி நிறுவனங்களுக்கு கடும் சவாலாக அமைந்தது.

அன்லிமிடட் காலிங்

இந்நிலையில், ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் ம்ற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மாட் போன் VOLTE வசதியை கொண்டுள்ளதால் இந்த போன் மூலம் செய்யப்படும் அனைத்து கால்களும் இன்டர்நெட் வழியாகவே செல்லும் இதனால் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங்களுக்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை.

100 மில்லியன் வாடிக்கையாளர்கள்

மேலும் இந்த நிறுவனம் 1500 விலையில் மற்றொரு ஸ்மாட் போனையும் அறிமுகப்படுத்த போவதாக தெரிகிறது. இந்த இருபோனிலும் உள்ள ஹார்ட்வேர் அம்சங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் 25மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்ற நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 4ஜி போன் மூலம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை கைபற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 ல் வெளியிடு
இந்த போனை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் லாவா மற்றும் ஒரு சீன நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த போன் 2017 ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் செல்போன் மார்கெட்டில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என பேசப்படுகிறது.




1 Comments:

  1. அதாவது, வேண்டுமென்றே கட்டத் தவறிய ‘கிங் பிஷர்’ மதுபான ஆலை அதிபரான விஜய் மல்லையாவின் வாராக்கடன் ரூ. 1201 கோடி உட்பட, 63 பெருமுதலாளிகளின் வாராக்கடன் ரூ. 7016 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியா [SBI]. 30-6-16 காலகட்டம் வரை அந்த வங்கி மட்டும் ரூ 48000 கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது!

    மேலும், கே.எஸ். ஆயில் நிறுவனத்தின் 596 கோடி ரூபாய், சூர்யா பார்மஸி நிறுவனத்தின் 526 கோடி ரூபாய், கெட் பவர் நிறுவனத்தின் 400 கோடி ரூபாய், சாய் இன்ஃபோ சிஸ்டம் செலுத்த வேண்டிய 376 கோடி ரூபாயும் இதில் அடங்கும். இந்த தகவலை டி.என்.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இப்போது அவரது கண்ணீரு பெருவெள்ளத்திற்கு காரணம் புரிந்திருக்கும். ஆனால், ஏழைகளின் கண்ணீர்????

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive