NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தின பலன் 6.11.2016

மேஷம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ரிஷபம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மிதுனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
கடகம்
தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
சிம்மம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
கன்னி
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
துலாம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பயணங்களால் பயனடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
விருச்சிகம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைகள் சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
தனுசு
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
மகரம்
ராசிக்குள் சந்திரன் செல்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
கும்பம்
வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
மீனம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive