NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சேக்கிழார் ஆராய்ச்சி மையம்: கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்

        சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் 24 -ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள், சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் அடுத்த ஆண்டு பிப்.5 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் செயலர் டி.எஸ்.தியாகராசன் கூறியதாவது:


பெரியபுராணம் காப்பியத்தை வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் நோக்கத்தில், எங்கள் மையம் கடந்த 24 ஆண்டுகளாக மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகளை நடத்தி தமிழ்ப் பணியாற்றி வருகிறது.
கடந்த ஆண்டு முதல் மாநில அளவில் பேச்சுப் போட்டியை நடத்தி பரிசுகளையும் வழங்கி வருகிறது. முதல்கட்டமாக சில மாவட்டங்களில் முதல் சுற்றுப் போட்டிகளை நடத்தி, அதன் பின்னர் சென்னையில் நிறைவு விழா நடத்தப்பட உள்ளது.

தலைப்பு: இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கான போட்டி, சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் உள்ள விவேகானந்தா அரங்கில் அடுத்த ஆண்டு பிப்.5 -ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ""தெய்வச்சேக்கிழார் நெறி நின்றால் சாதி வேற்றுமைகள் நீங்கும்'' (பெரிய புராணம்) என்ற தலைப்பில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

பரிசு: போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2 -ஆவது பரிசு ரூ.10 ஆயிரம், 3 -ஆவது பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக 3 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் வழங்கப்படும்.
போட்டி விதிகள்: மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் மாணவர்களே, சென்னையில் நடைபெறும் நிறைவுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு இருவழிச் பயணச் செலவு வழங்கப்படும்.
அதேசமயம், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு அவரவர் சொந்த செலவில் தான் வந்து செல்ல வேண்டும். இப்போட்டியில், ஒவ்வொரு கல்லூரியில் இருந்து இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கல்லூரி முதல்வர் அல்லது தமிழ்த் துறை தலைவரின் பரிந்துரை கடிதம் அவசியம். நடுவர்களின் தேர்வே நிறைவானது.

கூடுதல் விவரங்களுக்கு 99621 11867, 98408 78904, 90423 81129 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தியாகராசன் தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive