Printfriendly

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

www.Padasalai.Net

எளிதான பண பரிவர்த்தனைக்கு கை கொடுக்கும் மொபைல் போன் செயலி!!!

        எந்தவித கட்டணமும் இன்றி, மொபைல் போன் வாயிலாக, பண பரிமாற்றத்துக்கு உதவும் செயலிகள், தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்து, ஏராளமான மக்களை காப்பாற்றியுள்ளன. 
 
      உபயோகிக்க எளிதாக இருப்பதால், சாமானியர்களும், இந்த வசதியை பயன்படுத்த துவங்கியுள்ளனர். 


நிதி நெருக்கடி


பழைய, 500 - 1,000 ரூபாய் செல்லாது அறிவிப்பு வெளியான பின், வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும், கூட்டம் அலைமோதுகிறது. பணத்தை எடுக்க, பல மணி நேரம் கால் வலிக்க நிற்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த பிரச்னைகள் எதுவும் இன்றி, ஒரு தரப்பினர், இந்த நிதி நெருக்கடி நிலையை எளிதாக சமாளித்து வருகின்றனர். 

'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு'கள் உதவினாலும், பெரும்பாலானோரின் தேர்வாக இருப்பது, மொபைல் போன் மூலம் நடைபெறும், ரொக்கமில்லா பரிவர்த்தனையே. காகித பணம் இல்லாத நாடாக மாற, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், 120 கோடி மொபைல் போன் வாடிக்கையாளர்கள் உடைய நாட்டில், இது மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில், மாற்று கருத்து இல்லை. 
முதலிடம்


அதில், மின்சாரம், மளிகை, மொபைல் போன் ரீசார்ஜ், இன்சூரன்ஸ், ஆட்டோ, டாக்சி கட்டணம்; விமானம், சினிமா டிக்கெட் என, நுாற்றுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை அலட்டாமல் மேற்கொள்ளலாம். அதனால், இந்த செயலிக்கு மவுசு கூடி வருகிறது. இதில், நாட்டில் முதலிடத்தை பிடித்திருப்பது, 'பேடிஎம்' ஆகும். 

இந்த செயலியை, 'ஆண்ட்ராய்டு' போனில், 'பிளே ஸ்டோரில்' எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். பின், உள்ளே சென்றால், 'ஆட்மணி' என்ற ஆப்ஷனை அழுத்தியதும், உங்களுக்கு தேவையான தொகையை வங்கிக் கணக்கில் இருந்து, பேடிஎம் கணக்கிற்கு மாற்றலாம். 

நீங்கள் மாற்ற விரும்பும் தொகையை, 'டைப்' செய்ததும், உங்கள் டெபிட், கிரெடிட் கார்டு அல்லது 'நெட் பேங்கிங்' ஆகிய ஏதேனும் ஒன்றின் விபரங்கள் கேட்கப்படும். அதில், உங்கள் தேர்வை பதிவு செய்ததும், 'பே நவ்' என்ற ஆப்ஷன் வரும். அதை அழுத்தியதும், 'வேலட்' 
என்கிற உங்கள் பேடிஎம் கணக்கில் சேர்ந்து விடும். அதன்மூலம், நீங்கள் விரும்பியதை எளிதில் வாங்க முடியும். அதற்கு, எதிர்முனையில் இருப்பவரிடமும், பேடிஎம் வசதி இருப்பது அவசியம். 

காய்கறி முதல் கார் வரைஇன்று, பெட்ரோல் பங்க், மளிகை கடை, காய்கறி கடைகளிலும், இந்த வசதி உள்ளது. அங்கு சென்று பொருட்களை வாங்கியதும், செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்டு, கடைக்காரரின் மொபைல் எண்ணை, 'டைப்' செய்து, 'பே ஆர் சென்ட் மணி' என்ற ஆப்ஷனை அழுத்த வேண்டும். 

உடனே, அந்த கடைக்காரருக்கு பணம் போய் விடும். இருவரின் மொபைல் போன்களுக்கும், அந்த பரிவர்த்தனை பற்றிய எஸ்.எம்.எஸ்., வந்து விடும். சற்று விபரம் உள்ளவர்கள், கடைக்காரரின், 'கியூ ஆர் கோட்'ஐ மொபைலில், 'ஸ்கேன்' செய்து பணம் செலுத்துகின்றனர். இது, சிரமம் என நினைத்தால், முதலில் கூறிய முறையை பயன்படுத்தலாம். 

'பேடிஎம்' போலவே, 'வோடபோன்' நிறுவனத்தின், 'எம் பைசா' செயலியால், தொலைதுாரத்தில் வங்கிக் கணக்கு இல்லாத நண்பர், உறவினருக்கு, பணம் அனுப்ப முடியும். மேலும், 'ஏர்டெல் மணி, எஸ்.பி.ஐ., பட்டி, மொபிக்விக்' என, பல செயலிகளும் பிரபலமாகி வருகின்றன. முதல் முறை பயன்படுத்தும்போது, சற்று சிரமம் தெரியும். பின்னர், காய்கறி முதல் கார் வரை, ரொக்கமின்றி அனாயசமாக வாங்கலாம். 

ரொக்கமில்லா பொருளாதாரத்திற்கு, நாடு மாற முயற்சித்து வரும் நிலையில், நாமும் இதை பழகிக் கொண்டால், வரிசையில் முண்டியடிப்பதை தவிர்க்கலாம்.

ரொக்கமில்லா பொருளாதாரத்திற்கு, நாடு மாற முயற்சித்து வரும் நிலையில், நாமும் இதை பழகிக் கொண்டால், வரிசையில் முண்டியடிப்பதை தவிர்க்கலாம்

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading