Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது?

        மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
         'எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் தவிர, அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம்' என, கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்விலிருந்து, மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனாலும், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், தனியார் கல்லுாரிகளின், மருத்துவ மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே நடந்தது. வரும் ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு, மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கு டிசம்பர் முதல் விண்ணப்பங்களை பெற, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. அதனால், இரு வாரங்களில், 'நீட்' தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

4 comments

  1. மாணவர்களின் எதிர் காலம் கேள்விக் குறியாகியுள்ளது.அரசும் கண்டு கொள்ளாமல் நீட் தேர்வுக்கு அனுமதிவழங்கிவிட்டது.

    ReplyDelete
  2. பணம் உள்ளவ்ர்கள் பயிற்சிவகுப்புகளில் கலந்து கொண்டு தேர்ச்சிபெற்று விடுவார்கள்.ஆனால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலை?மாணவர் நலனுக்கு எதிரான நீட் தேர்வு வேண்டாம்.

    ReplyDelete
  3. பணம் உள்ளவ்ர்கள் பயிற்சிவகுப்புகளில் கலந்து கொண்டு தேர்ச்சிபெற்று விடுவார்கள்.ஆனால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலை?மாணவர் நலனுக்கு எதிரான நீட் தேர்வு வேண்டாம்.

    ReplyDelete
  4. நீட் கட்டாயமாக்கப்பட வேண்டிய ஒன்று என்றால் அனைத்து வகையான பள்ளிகளும் ஒரே தரத்தில் இருந்தால் நல்லது. ஆசிரியர்களுக்கே தகுதி தேர்வு எழுதும் போது எதிர்கால மருத்துவர்கள் இந்த தேர்வை எழுதி சோதிப்பது நல்லது..ஆனால் அரசு பள்ளி எப்படி பரிதாப நிலையில் இருக்கிறதோ அதேபோல் தான் மாணவர்களின் நிலைமையும். RMSA மூலம் பயிற்சி பயிற்சி என்று கோடிக்கணக்கான ரூபாயை விரயம் செய்யும் அரசு , அரசு பள்ளி ஆசிரியர்களை நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் விதத்தில் தயார் செய்வதோடு ஊக்கத்தொகையும் வழங்கினால் கண்டிப்பாக அரசுப்பள்ளியும்அடுத்த நிலைக்கு நகரும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading