Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாரம்பரியம் மிக்க பிரிட்டன் கல்வி!


பல நூற்றாண்டுகளாகவே, உலகளவில் பிரிட்டனில் கல்விமுறையானது புகழ்பெற்று விளங்குகிறது. அந்நாட்டின் புதிய விசா விதிமுறைகள், மாணவர்கள் அந்நாட்டில் பெறும் வேலைவாய்ப்புகளை குறைத்துவிட்டிருந்தாலும் கூட, அந்நாட்டு கல்வியின் மீதான ஆர்வம் மாணவர்களுக்கு குறையவில்லை.
பிரிட்டனின் எல்லைப்புற ஏஜென்சி(UKBA) -ன் புதிய விதிமுறைகள், மாணவர் விசா நடைமுறையில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் விதத்தில் அமைந்துள்ளதால், பிரிட்டன் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் முன்பாக அந்த விதிமுறைகள் பற்றி அலசி ஆராயும் தேவை ஏற்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைப்பு
இளநிலை மற்றும் முதுநிலை அளவில், பல துறைகளிலான பட்டப் படிப்புகள் பிரிட்டனில் வழங்கப்படுகின்றன. இளநிலை அளவில் ஒருவர், டிகிரி, உயர் தேசிய டிப்ளமோ(Higher national diploma), அடிப்படை டிகிரி அல்லது டிப்ளமோ ஆகியவற்றிலிருந்து தனக்கானதை தெரிவு செய்து கொள்ளலாம்.
அதேபோல் முதுநிலை படிப்பு நிலையில் ஒரு மாணவர், ப்ரீ மாஸ்டர் கோர்ஸ், ஒரு வருட போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ/சர்டிபிகேட், மாஸ்டர் கோர்ஸ்கள், எம்பிஏ, எம்பில் மற்றும் டாக்டரேட் ஆகிய படிப்புகளில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். படிப்பின் வகையைப் பொறுத்து, அவற்றுக்கான காலகட்டம், 1 முதல் 4 வருடங்கள் வரை இருக்கும்.
சேர்க்கை முறைகள்
ஒரு கல்வி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கும் முன்பாக ஒரு மாணவர், அதற்கான தகுதிகள் தனக்கு இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கான விபரங்களை அறிந்துகொள்ள ஒருவர், தான் விரும்பும் பல்கலையின் இணையதளத்திற்கு சென்று விரிவான விபரங்களை அறியலாம். Tier 4 மாணவர் விசா விண்ணப்பத்திற்கான ஆங்கில மொழியறிவு தகுதிநிலையை UKBA   உயர்த்தியுள்ளது.
பிரிட்டனில் பட்டப்படிப்பு படிக்க செல்ல விரும்பும் ஒரு மாணவர், INTERMEDIATE  நிலையில் ஆங்கிலம் பேசி தகுதியை நிரூபிக்க வேண்டும்.
புகழ்பெற்ற படிப்புகள்
இளநிலை மற்றும் முதுநிலை அளவில், அறிவியல் தொடங்கி தொழில்நுட்பம் வரையிலும், மேலாண்மை தொடங்கி டிசைன் வரையிலும் பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
செலவினங்கள்
சராசரி ஆண்டு கல்வி கட்டணம் 13,000 பிரிட்டன் பவுண்டு முதல் 22,000 பவுண்டுகள் வரை ஆகிறது. அதேசமயம், மெடிக்கல் மற்றும் எம்பிஏ படிக்கும் மாணவர்களுக்கு, பிற படிப்பு மாணவர்களைவிட அதிக செலவாகிறது. மேலும், ஒரு மாணவருக்கான தங்கும் செலவு, வருடத்திற்கு 3,000 பவுண்டிலிருந்து 5,000 பவுண்டுகள் வரை ஆகிறது.
வேலை வாய்ப்புகள்
விடுமுறை காலத்தின்போது, ஒரு மாணவர், பகுதிநேரமாக வாரத்திற்கு 20 மணிநேரங்களும் மற்றும் முழுநேர பணியிலும் ஈடுபடலாம். ஆனால் புதிய குடியேற்ற விதியானது, மாணவர்கள் தங்களின் படிப்பிற்கு இந்த வகையில் நிதி திரட்டுவதை தடுக்கிறது. புதிய விதிமுறையின்படி, திறன்மிகு பணிகளுக்காக, Tier 2 படி, குறிப்பிட்ட உதவியளிக்கும் நிறுவனங்களால்(sponsored employer) பணியமர்த்தப்பட்ட பட்டதாரிகள் மட்டுமே, படிப்பிற்கு பிறகு பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.
அதேசமயம், இதுபோன்ற sponsored நிறுவனங்கள், UKBA -யிடம் பதிவுசெய்திருக்க வேண்டும். மேலும், புதிய விதியின்படி, இந்த சிறப்பு அனுமதியைப் பெறும் ஒரு மாணவரின் ஊதியம் வருடத்திற்கு 20,000 பவுண்டுகளுக்கு கீழ் இருக்கக்கூடாது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive