Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு : அக்டோபர் 14ந் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம் 28ஆம் தேதிக்கு மாற்றம்



     வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்காக அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறவிருந்த சிறப்பு முகாம் அக்டோபர் 28-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. பொது மக்களின் வசதிக்காக, அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 14-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அன்று நடைபெறுவதாக இருந்த வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கான சிறப்பு முகாம் அக்டோபர் 28-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த ஒரு மாதத்துக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், பெயர் நீக்கம் உள்ளிட்ட பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியுள்ளது.





Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive