NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு:​ நாடு முழு​வ​தும் 7.8 லட்​சம் பேர் பங்​கேற்பு

பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு (யு.ஜி.சி.)​சார்​பில் தேசிய விரி​வு​ரை​யா​ளர் தகு​தித் தேர்வு சென்னை உள்​பட நாடு முழு​வ​தும் இன்று (டிசம்​பர் 30) நடை​பெ​று​கி​றது.​மொத்​தம் 77 மையங்​க​ளில் நடை​பெ​றும் இந்​தத் தேர்வை 7.8 லட்​சம் பேர் எழு​து​கின்​ற​னர்.​இந்​தத் தேர்​வில் விரி​வு​ரை​யா​ளர் தகுதி பெற புதிய விதி​மு​றை
​கள் அமல்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளன.​சென்​னை​யில் 10 தேர்வு மையங்​க​ளில் 12,500 பேர் இந்​தத் தேர்வை எழுத உள்​ள​னர்.​முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை​யி​லும்,​இரண்​டாம் தாள் காலை 10.45 மணி முதல் 12 மணி வரை​யி​லும்,​மூன்​றாம் தாள் பிற்​ப​கல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை​யி​லும் நடை​பெ​றும்.​முதல் தாளில் 60 கேள்​வி​க​ளும் (100 மதிப்​பெண்)​,​இரண்​டாம் தாளில் 50 கேள்​வி​க​ளும் (100 மதிப்​பெண்)​,​மூன்​றாம் தாளில் 75 கேள்​வி​க​ளும் (150 மதிப்​பெண்)​இடம்​பெ​றும்.​முதல் தாளில் 50 கேள்​வி​க​ளுக்​கும்,​மீத​முள்ள 2 தாள்​க​ளில் அனைத்து கேள்​வி​க​ளுக்​கும் கட்​டா​யம் விடை​ய​ளிக்க வேண்​டும்.​பொதுப்​பி​ரி​வி​ன​ருக்கு 40 சத​வீத மதிப்​பெண்​ணும்,​இதர பிற்​ப​டுத்​தப்​பட்​ட​வர்கள்,​எஸ்.சி.,​எஸ்.டி.​பிரி​வி​ன​ருக்கு 35 சத​வீத மதிப்​பெண்​ணும் தேர்ச்சி மதிப்​பெண்​ணாக நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது.​மூன்​றாம் தாளுக்கு மட்​டும் 75 (50 சத​வீ​தம்)​தேர்ச்சி மதிப்​பெண்​ணாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​இதில் இதர பிற்​ப​டுத்​தப்​பட்​டோ​ருக்கு தேர்ச்சி மதிப்​பெண்​ணாக 68 மதிப்​பெண்​ணும் (45 சத​வீ​தம்)​,​எஸ்.சி.,​எஸ்.டி.​பிரி​வி​ன​ருக்கு 60 மதிப்​பெண்​ணும் (40 சத​வீ​தம்)​நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​புதிய விதி​மு​றை​கள்:​இந்​தத் தேர்​வில் விரி​வு​ரை​யா​ள​ரா​கத் தகு​தி​பெற புதிய விதி​மு​றை​க​ளை​யும் பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு அமல்​ப​டுத்​தி​யுள்​ளது.​அதன்​படி,​தேர்ச்சி பெற்​ற​வர்​க​ளைக் கொண்டு பாட​வா​ரி​யாக தகு​திப் பட்​டி​யல் தயா​ரிக்​கப்​ப​டும்.​அனைத்​துப் பாடங்​க​ளி​லும் தேர்ச்சி பெற்​ற​வர்​களி​லி​ருந்து முதல் 15 சத​வீ​தம் பேர் மட்​டுமே விரி​வு​யு​ரை​யா​ளர் தகுதி பெற்​ற​வர்​க​ளாக அறி​விக்​கப்​ப​டு​வார்​கள்.​இளம் ஆராய்ச்​சி​யா​ள​ருக்​கான உத​வித் தொகை வழங்க இவர்​களி​லி​ருந்து தனி​யான தகு​திப் பட்​டி​யல் தயா​ரிக்​கப்​ப​டும் என்று பல்​க​லைக்​க​ழக மானி​யக் குழு அறி​வித்​துள்​ளது.​கடந்த தேர்​வில் தேர்ச்சி விதி​மு​றை​களை மாற்​றி​ய​தைத் தொடர்ந்து தேர்வு முடி​வு​களை வெளி​யி​டு​வ​தில் பல்​வேறு பிரச்​னை​கள் எழுந்​தன.​இதைத் தொடர்ந்து,​புதிய விதி​மு​றை​கள் இப்​போது அறி​விக்​கப்​பட்​டுள்​ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive