Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை


              தமிழக அரசின் 20132014ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 21ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபையில் பொது விவாதம் நடந்தது. பட்ஜெட் மீது நடந்த விவாதத்திற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 1ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் தள்ளிவைத்தார்.

                   இந்நிலையில், சட்டசபை கூட்டம் 3 நாள் விடுமுறைக்கு பிறகு நாளை தொடங்குகிறது. பட்ஜெட் மீது நடந்த பொது விவாதத்தை தொடர்ந்து, பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நாளை முதல் நடைபெறுகிறது.

                        முதல் நாளான நாளை, உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கையை அமைச்சர் கே.பி.முனுசாமி தாக்கல் செய்கிறார். அதன் மீது நடக்கும் விவாதத்திற்கு பிறகு, அமைச்சர் பதில் அளிப்பார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மானியக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, அந்த துறைக்கான நிதி ஒதுக்கப்படும். அதைத் தொடர்ந்து, 2ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, 3ம் தேதி சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, 4ம் தேதி உயர் கல்வித்துறை, 5ம் தேதி வேளாண்மைத்துறை, 8ம் தேதி கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, 19ம் தேதி தொழில்துறை, 22ம் தேதி காவல் துறை, மே மாதம் 3ம் தேதி போக்குவரத்துத்துறை, 7ம் தேதி செய்தி துறை, 8ம் தேதி தொழிலாளர் நலன், 9ம் தேதி அறநிலையத் துறை, 10ம் தேதி பள்ளி கல்வித்துறை, 14ம் தேதி சுகாதாரத்துறை உள்ளிட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் முடிந்ததும், மே 16ம் தேதி அரசு சட்ட முன்வடிவுகள், இதர அலுவல்கள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும்.சட்ட சபை கூட்டம் தினமும் காலை 10மணிக்கு தொடங்கி பகல் 2மணிக்கு முடியும். சபை நடவடிக்கைகளை பொறுத்து, கூட்டத்தின் நேரத்தை சபாநாயகர் நீட்டிப்பார்.




2 Comments:

  1. oh my god! we should wait for tet announcement till 10-5-2013

    ReplyDelete
  2. oh my god! we should wait for tet announcement till 10-5-2013

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive