Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு



              10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம். இவ்வகை படிப்புகள் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் தொடர்ந்து இவற்றை மீண்டும் தெரிந்துக்கொள்வது அவசியமே.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு

2. பட்டய படிப்பு (டிப்ளோமா)

3. சான்றிதழ் படிப்பு (ITI)


பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.

I. மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு:

1. First Group

எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. 

 (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc…) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு : B.Com, CA (Charted accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.

5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன

6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

II. பட்டய படிப்பு (டிப்ளோமா):

இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil etc… போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன. டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ). 12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.

III. சான்றிதழ் படிப்பு (ITI):

இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.


10 – ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)

1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)

2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc…

3.Data Entry வேலைகள்

4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.

நன்றி கலாம் கதிர் அவர்கள்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive