Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நல்லோர் உதவியால் UPS கிடைத்தது. 60 இரவுகள் பள்ளியிலேயே மாணவர்களுடன் கழித்தேன் - சிறப்பு கட்டுரை

எங்கள் பள்ளியின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்: 62 %
தேர்வு எழுதியோர்: 99
தேர்ச்சி : 61
கடந்த ஆண்டைக் காட்டிலும் 13 % உயர்ந்துள்ளது. 
 
குறைந்தபட்சமாக எனது பாடமாகிய ஆங்கிலத்தில் 64% பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
(99 பேரில் ஆங்கிலப் பாடத்தில் 63 பேர் தேர்ச்சி 36 பேர் தோல்வி) 

        ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 49. படிப்பில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள். ஏகத்துக்கும் கெட்ட பெயர் எடுத்திருந்த மாணவர்கள். ஏதாவது செய்தாலன்றி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்ற நிலையில் Night Class துவங்கினேன். நல்லோர் உதவியால் UPS கிடைத்தது. 60 இரவுகள் பள்ளியிலேயே மாணவர்களுடன் கழித்தேன். அதி அற்புத நிகழ்வுகளெல்லாம் அரங்கேறின. வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள். இனி எப்போது வாய்க்குமெனத் தெரியாது. 

இரவு வகுப்பிற்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை : 66 (இயன்ற நாட்கள் மட்டும் வந்தவர்களையும் சேர்த்து) 
தேர்ச்சி பெற்றோர்: 61பேர்
தோல்வி அடைந்தோர்: 5 பேர்
தேர்ச்சி சதவிகிதம்: 92 %

மொத்தத்தில் தோல்வியடைந்த 38 மாணவர்களில் 
33 பேர் இரவு வகுப்பிற்கு வராதவர்கள். 
அம் மாணவர்களிடமும்,
அவர்களது பெற்றோரிடமும்,
 
பல முறை எடுத்துச் சொல்லியும் இரவு வகுப்பிற்கு வர அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. 
அடுத்த வருடம் இவ்வாறான மாணவர்கள் மீது மிகக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

இரவு வகுப்பின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்ட,
100% வளைந்து கொடுத்து, முனைப்பாகப் படித்து, எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய எனது பேரன்பிற்கும் நன்றிக்கும் என்றும் உரிய என் மாணவச் செல்வங்களுக்கு உளமார்ந்த நன்றியும் வாழ்த்தும்.

பேராதரவு தந்த Facebook நண்பர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. 

தேர்வில் தோல்வியடைந்த 36 மாணவர்களில் 34 பேரை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் சொல்லி, அவர்களது பெற்றோர்களிடமும் பேசி விட்டு இதோ facebook-ல் பதிவிடுகிறேன். - ஒரு அரசு பள்ளி ஆசிரியர்.




1 Comments:

  1. Good Work. Do the same. The students are lucky to have you as a English Teacher.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive