NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெளிநாட்டு மருத்துவக் கல்வி - ஒரு அலசல்


         மருத்துவப் படிப்புகளுக்கான மவுசு எப்போதுமே குறையாமல் இருக்கும் இந்தியாவில், வெளிநாட்டு மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வமும் அதிகம். அதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

நுழைவுத்தேர்வு இல்லை
பல வெளிநாட்டு மருத்துவக் கல்வி நிறுவனங்கள், சர்வதேச மாணவர்களை, நுழைவுத்தேர்வின் மூலம் தேர்வு செய்வதில்லை. அவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் ஆங்கில மொழியில் பெற்றிருக்கும் அறிமுகம் ஆகியவைகளின் அடிப்படையிலேயே இடம் வழங்கப்பட்டு விடுகிறது.
பல நாடுகளில், சர்வதேச மாணவர்களை மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்க்க நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவதில்லை என்றாலும், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில், MCAT என்ற தேர்வு நடத்தப்படுகிறது.
அதிகபட்ச கட்டணம்
இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது பலருக்கும் கடினமான ஒரு காரியமாக உள்ளது. மேலும், இங்கே மேனேஜ்மென்ட் கோட்டாவில் கேட்கப்படும் தொகையும் மிக அதிகமாக உள்ளது.
ஆனால், இதனோடு ஒப்பிடுகையில், பல வெளிநாட்டுப் பல்கலைகளில் கட்டணம் குறைவாகவே உள்ளது. அங்கே, வருடாந்திர முழு கல்விக் கட்டணம் ரூ.2 லட்சம் தொடங்கி ரூ.20 லட்சம் வரையினதாக உள்ளது.
ஸ்கிரீனிங் தேர்வு
வெளிநாட்டு மருத்துவக் கல்வி நிறுவனத்தில் இடம் பெறுவது எளிதான ஒன்றாக இருக்கலாம். ஆனால், அங்கே படித்துமுடித்து இந்தியா திரும்பும் மாணவர்கள், இங்கே மருத்துவராக பயிற்சிசெய்ய வேண்டுமெனில், இந்திய மருத்துவக் கவுன்சிலால் நடத்தப்படும், FMGE எனப்படும் ஸ்கிரீனிங் தேர்வை எழுதி தேர்ச்சிப்பெற வேண்டும்.
அங்கீகாரம் இருக்க வேண்டும்
இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் FMGE ஸ்கிரீனிங் தேர்வை ஒரு மாணவர் எழுத வேண்டுமெனில், அவர் வெளிநாட்டில் பெற்ற மருத்துவப் பட்டம், அந்த குறிப்பிட்ட நாட்டின் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் அவர் படித்த மருத்துவக் கல்வி நிறுவனம், உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) அங்கீகாரப் பட்டியலிலும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
போலி கல்வி நிறுவனங்கள்
வெளிநாட்டில் பல போலி கல்வி நிறுவனங்கள், முறையான அங்கீகாரம் இன்றி இயங்கி வருகின்றன. அதுபோன்ற பல்கலைகளில், அவசரப்பட்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர், தனது பணத்தையும், நேரத்தையும் அநியாயமாக இழப்பார். எனவே, ஒரு வெளிநாட்டுக் கல்வி நிறுவனத்தில் மருத்துவப் படிப்பில் சேர நினைக்கும் மாணவர், விரிவானதொரு ஆய்வை மேற்கொண்டு, நன்கு விசாரித்து, தெளிவுபெற்ற பிறகே சேர வேண்டும்.
எனவே, முன்னாள் மாணவர், ஆலோசனை மையங்கள் மற்றும் இணையதளம் ஆகியவற்றின் மூலம் இதற்கான தேடலை மேற்கொள்ளலாம்.
இந்திய மாணவர்களால் மருத்துவம் படிக்க அதிகம் விரும்பப்படும் சில நாடுகள்
ஹங்கேரி
ரஷ்யா
போலந்து
ஜிம்பாப்வே
சீனா
மொரீஷியஸ்
உக்ரைன்
கரீபியன் தீவுகள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive