NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பார்வையற்ற மாணவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


           பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், 12 நாட்களாக நடத்திய போராட்டம், நேற்று முடிவுக்கு வந்தது.

          ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில், மாற்றுத் திறனாளிகள், 60 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதை, 40 மதிப்பெண்ணாக குறைக்க வேண்டும். சிறப்பு பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்பது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற கல்லூரி மாணவர் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், பார்வையற்ற பட்டதாரிகள், கடந்த, 16ம் தேதி போராட்டத்தை துவக்கினர்.

           பட்டதாரிகள் ஒன்பது பேர் உண்ணாவிரதம் இருந்தனர். இவர்களை தவிர, தினமும், சென்னையின் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாணவ, மாணவியரை போலீசார் கைது செய்து, கோயம்பேடு, உத்தண்டி சுடுகாடு, மதுராந்தகம் போன்ற பகுதிகளில் விட்டுவிட்டு வந்தனர். போலீசாருக்கு, டிமிக்கி கொடுத்துவிட்டு, தினம் ஒரு இடத்திற்கு, போராட்டத்தை மாற்றினர்; நாளுக்கு நாள், அவர்களின் போராட்டம் வலுப்பெற்றது.

             அவர்களுடன் அதிகாரிகள், சமூக நலத்துறை அமைச்சர், ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தீர்வு ஏற்படவில்லை. முதல்வரை சந்திக்கும் வரை, போராட்டம் தொடரும்&' என, பார்வையற்ற மாணவர்கள் அறிவித்தனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோரை, போலீசார் கைது செய்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை அரசியல் கட்சியினர் சந்திக்க துவங்கினர்; உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
.
             இச்ழலில், நேற்று காலை, 11:10 மணிக்கு, தலைமைச் செயலகத்தில், அமைச்சர் வளர்மதி தலைமையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. பார்வையற்ற கல்லூரி மாணவர் மற்றும் பட்டதாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன், செயலர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள், இதில் பங்கேற்றனர்.

               பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த நாகராஜன் கூறுகையில், "முதல்வர் அறிவுரைபடி, அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, முதல்வர் உறுதி அளித்திருப்பதாக, அமைச்சர் தெரிவித்தார். அதை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். எங்கள் கோரிக்கைகளை முதல்வர் தீர்ப்பதாக அறிவிப்பார் என, நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்" என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive