NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PG TRB - கேள்வித்தாளை பிழையாக அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம்: டி.ஆர்.பி., முடிவு


      முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் பாட கேள்வித்தாளை, பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு, அபராதம் விதிப்பதுடன், அந்த அச்சகத்தை, கறுப்பு பட்டியலில் சேர்க்கவும், டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

          அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வு எழுதினர். இதன் முடிவு, இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 52 கேள்விகளில், எழுத்துப்பிழைகள் இருந்தன என்றும், இதனால், அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர், ஐகோர்ட், மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு, டி.ஆர்.பி.,க்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. "கேள்விகளில் உள்ள எழுத்துப்பிழையால், கேள்வியை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படவில்லை, எனினும், அந்த கேள்விகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள கேள்விகளை கணக்கிட்டு, மதிப்பெண் வழங்கலாம்' என்ற, டி.ஆர்.பி.,யின் கருத்தை, கோர்ட் ஏற்கவில்லை. "பிழையான கேள்விகளை அச்சிட்டது ஏன்?, இதற்கு டி.ஆர்.பி., தான் பொறுப்பு' என்று, கோர்ட் தெளிவாக கூறிவிட்டது. பெரிய சிக்கலுக்கு காரணமான, அச்சகத்தின் மீது, டி.ஆர்.பி., கடும் கோபத்தில் உள்ளது.

           இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள அச்சகத்தில் தான், கேள்வித்தாளை அச்சடித்தோம். "செக்யூரிட்டி பிரஸ்' என, கூறப்படும் இதுபோன்ற அச்சகங்களில், கேள்வித்தாள்கள் தவிர, வேறு எதுவும் அச்சிடப்படாது. கேள்விகள் கலக்கப்பட்டு, பின், "ஏ.பி.சி.டி.,' என, நான்கு பிரிவாக அச்சடிக்கப்பட்டன. இதில், "பி' வகை கேள்வித்தாளில் தான், எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. கம்ப்யூட்டரில், "பான்ட்' கோளாறு ஏற்பட்டதால், எழுத்துப்பிழை ஏற்பட்டதாக, அச்சகம் தெரிவித்துள்ளது. அச்சடிப்பதற்கு முன், அச்சகத்தில் உள்ள பாட வாரியான நிபுணர்கள், கேள்விகளை சரிபார்ப்பர்; அச்சடிக்கப்பட்டபின், சரிபார்ப்பது கிடையாது. அப்படியே, சீலிடப்பட்டு அனுப்பப்படும். நடந்த குளறுபடிக்கு, அச்சகம் தான் காரணம். இதற்காக, சம்பந்தபட்ட அச்சகத்தின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். "பில்' தொகையில், 25 சதவீதம் வரை, அபராதம் விதிப்பது, அந்த அச்சகத்தை, "கறுப்பு பட்டியலில்' சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.




11 Comments:

  1. முதலில் மற்ற பாடத்திற்கான தேர்வு முடிவை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. தேர்வு முடிவை தாமத படுத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது மற்ற பாட தேர்வர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

    ReplyDelete
  3. Athellam sari. Trb board thoongugiratha? Pg trb result eppo veli vidurangalam. Exam eluthi 2 month aghiduchu. Arts and science college assistant professor certificate verification pattrium poly technic college lectures trb annoncement pattrium thagavale kanom. Tet result?

    ReplyDelete
  4. இன்னும் தேர்வு முடிவுக்கு பிறகு எழும் வழக்கு மிகவும் கொடுறமானது
    சென்ற வருடம் தாவரவியல் பட்டதாரிகள் பட்ட வேதனை சொல்லியும் மாலது. தேர்வு எழுதிய நாளன்றே பணி நியமனம் பெற்ற அவலம்.

    ReplyDelete
  5. தேர்வு முடிவை தாமதபடுதும் டி.ஆர்.பி யை எந்த பட்டியலில் சேர்ப்பது?

    ReplyDelete
  6. வர வர டி.ஆர்.பி க்கு இதே பொழப்பா போச்சி

    ReplyDelete
  7. டி.இ.டி ரிசல்ட் எப்பனு அறிவிக்க வேண்டும்

    ReplyDelete
  8. தமிழ் வழி இட ஒதுக்கிட்டின் கீழ் இன்னும் நிரப்பபடாமல் உள்ள வணிகவியல்,வரலாறு மற்றும் பொருளியல் பாடத்திற்க்கான தேர்வு முடிவு என்ன ஆயிற்று?

    ReplyDelete
  9. அனைத்து பாட பிரிவுக்கும் ஒரே நேரத்தில் முடிவைவவெளியிட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சினியாரிட்டி பிரச்சினைகள் எழும்.

    ReplyDelete
  10. சென்ற வருடம் தாவரவியல் தவிர அனைத்து பாடத்திற்க்கும் 11 டிசம்பர் 2012 தேர்வு முடிவு வெளியிடப்பட்டு 29 டிசம்பர் 2012 அன்று பணி நியமன ஆணையை பெற்றனர்.பிறகு 02 ஜனவரி 2013 பணியில் சேர்ந்தனர். தாவரவியல் ஆசிரியர்களுக்கு மட்டும் 08 ஏப்ரல் 2013 தேர்வு முடிவு வெளியிடப்பட்டு 27 மே 2013 அன்று பணி நியமன ஆணையை பெற்று 10 ஜுன் 2013 அன்று பணியில் சேர்ந்தது அப்போது சீனியாரிடி எங்கே போனது?.

    ReplyDelete
  11. தமிழ் பாட வழக்கு நிலுவையில் இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. மற்ற பாடத்திற்கு முடிவு வெளியிட ஒரு தடையும் இல்லை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive