Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனம் : ஐகோர்ட் உத்தரவு


          "பி.ஏ., (கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்), பி.காம்., பட்டப் படிப்பிற்கு சமம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனத்தில் மனுதாரரை நிராகரித்தது ஏற்புடையதல்ல. பணி நியமனம் வழங்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

            ராஜபாளையம் ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனு: 1998 ல் பி.ஏ.,(கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்-நிறுவன செயலாண்மை) படித்தேன். 2008 ல் எம்.காம்., (வணிகவியல்) முடித்தேன். பி.எட்., தேர்ச்சி பெற்றேன். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் முதுகலை ஆசிரியர்கள் 2895 பேர் நியமனத்திற்கான தேர்வு 2012 மே 27 ல் நடந்தது.

          வணிகவியல் பாடத்திற்கு நான் தேர்வு எழுதினேன். மொத்தம் 150 மதிப்பெண்ணில், அதிகபட்ச மதிப்பெண் 121 எடுத்திருந்தனர். எனக்கு 109 மதிப்பெண் கிடைத்தது. தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதிப் பட்டியலை 2012 டிச.,11 ல் டி.ஆர்.பி., வெளியிட்டது. என் பெயர் இல்லை.

           டி.ஆர்.பி., அலுவலகத்தில் விசாரித்த போது, "நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை நீங்கள் பெறவில்லை. பி.காம்.,-எம்.காம்.,- பி.எட்., முடித்தவர்களை மட்டும் அனுமதிக்க முடியும்" என்றனர்.

              பி.ஏ.,(நிறுவன செயலாண்மை), பி.காம்., படிப்பிற்கு சமம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், எனக்கு பணி வாய்ப்பை நிராகரித்த டி.ஆர்.பி., உறுப்பினர் செயலாளர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பெண்களுக்கான பொதுப்பிரிவின் கீழ் எனக்கு தகுதி உள்ளது. பணி நியமனம் வழங்க வேண்டும், என குறிப்பிட்டார்.

                நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் வீரகதிரவன் ஆஜரானார். அரசு தரப்பு வக்கீல், "அரசு உத்தரவானது, கூட்டுறவுத்துறை பணி நியமனத்திற்கு மட்டுமே பொருந்தும். ஆசிரியர் பணிக்கு பொருந்தாது" என்றார்.

              நீதிபதி: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற சிரமத்துடன் படிக்கின்றனர். பி.ஏ.,(நிறுவன செயலாண்மை), பி.காம்., பட்டத்திற்கு சமம் என 2004 ல் அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், மனுதாரரை நிராகரித்தது ஏற்புடையதல்ல. மனுதாரருக்கு 6 வாரங்களுக்குள் பணி நியமனம் வழங்க டி.ஆர்.பி., உறுப்பினர் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.




1 Comments:

  1. Why TRB always creating this type of problems. They should have given training for this. they should know about the basic rules.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive