NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"கேட்" தேர்வில் பெண்கள் ஆர்வம்


          "காமன் அட்மிஷன் டெஸ்ட்" எனப்படும் "கேட்" தேர்விற்கு, விண்ணப்பித்த பெண்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்து உள்ளது.

          "கேட்" தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதன் மூலம், நாட்டின் உயர்கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ( ஐ.ஐ.எம்.,) மற்றும் பல மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம். நாடு முழுவதும் உள்ள 13 ஐ.ஐ.எம்.,களில், இந்தாண்டு மேலும் 115 இடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 3,335 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

              கடந்த ஆண்டு 2.14 லட்சமாக இருந்த கேட் தேர்வர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு 1.95 லட்சமாக குறைந்துள்ளது. குறைந்தது இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ள தேர்வர்களின் சதவீதம் இந்தாண்டு ( 2012 - 13 %, 2013 - 16 %) உயர்ந்துள்ளது. பணி அனுபவம் இல்லாத தேர்வர்களின் சதவீதம் இந்தாண்டு ( 2012 - 68 %, 2013 - 66 %) குறைந்துள்ளது.

              தொழில்நுட்பம் மற்றும் இன்ஜினியரிங் படித்த தேர்வர்களின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்து 70 சதவீதமாக உள்ளது. பொருளாதாரம், மேனேஜ்மென்ட், அறிவியல் படித்த தேர்வர்களின் எண்ணிக்ககை 23 சதவீதமாக உள்ளது .

                  "கேட்" தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தொடர்ந்து உத்தர பிரதேசம், டில்லி தலா இரண்டு, மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளது.

கேட் தேர்வு அக்.,16 முதல் நவ.,11 வரை நடக்கிறது.

சீமந்திரா மாணவர்களுக்கு சலுகை
                     சீமந்திரர பகுதியில் நிலவும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக, அங்கு கேட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாள் மற்றும் தேர்வு மையத்தில் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

              இப்பகுதி மாணவர்கள், விஜயவாடா அல்லது விசாகபட்டினத்தை தேர்வு மையமாக தேர்வு செய்துகொள்ளலாம். அல்லது பெங்களூரு, புவனேஷ்வர், சென்னை, கோல்கட்டா போன்றவற்றையும் தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                     இம்மாணவர்கள், "கேட் தேர்வு பதிவில்" நுழைந்து தங்களுக்கு சாதகமான தேர்வு நாள் மற்றும் மையத்தை தெரிவு செய்து நுழைவுச் சீட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மாநிலவாரியாக கேட் தேர்வர்களின் எண்ணிக்கை
மகாராஷ்டிரா - 25, 333
உத்தர பிரதேசம் - 22, 841
டில்லி - 20, 596
ஆந்திரா - 18,723
தமிழகம் - 12, 348
கர்நாடகா - 12, 155
மேற்கு வங்கம் - 10,883
அரியானா - 9,339
மத்திய பிரதேசம் - 9,102
குஜராத் - 6,898





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive