NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

RMSA-தலைமையாசிரியர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது எப்படி என பயிற்சி


            அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தருமபுரியில் 29.10.2013 அன்று நடைபெற்றது. 


          நிகழ்ச்சியில்அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர்,திரு.ஆ.சங்கர் அவர்களும், இணை இயக்குநர் திரு.பூ.ஆ.நரேஷ் அவர்களும் சிறப்புரையாற்றினார்.
         அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் 29.10.2013 அன்று நடைபெற்றது.

            இப்பயிற்சி பணிமனையில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்  பணிபுரியும்  80 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.இராமசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

           திரு.ஆ.சங்கர், திட்ட இயக்குநர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், சென்னை அவர்களால்  இப்பயிற்சி பணிமனையானது துவங்கி வைத்து, திட்ட செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நுணுக்கங்கள் குறித்தும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

              அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குநர் திரு.பூ.ஆ.நரேஷ் அவர்கள் தலைமையாசிரியர்கள்; ஆசிரியர்களை எவ்வாறு நல்லிணக்கப்படுத்தி மாணாக்கர்களுக்கு கல்வி கற்பிப்பது என்றும், கற்றலில் பின்தங்கிய மாணாக்கர்களை எப்படி முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வது என்றும் தலைமையாசிரியர்களுக்கு கருத்துரை வழங்கினார். வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி நிறுவனர் திரு.வருவான் வடிவேலன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

               அனைவருக்கும் இடைநிலைக்;கல்வி இயக்க மாநில திட்ட நிர்வாக ஆலோசகர் திரு.கு.முத்துசாமி, அவர்கள் தினமும் முன்னேற்றத்தை நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்வது எப்படி என ஆலோசனைகள் வழங்கினார். கிருஷ்ணகிரி  மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர்  திரு.மு.பாஸ்கரன் அவர்கள் தலைமையாசிரியர் பண்புகள் மற்றும் ஊக்குவித்தல் குறித்து பயிற்சி அளித்தார். தருமபுரி மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என்.திருநாவுக்கரசு அவர்கள் தலைமையாசிரியர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது எப்படி என பயிற்சி அளித்தார். திரு.வ.ராஜா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை), திரு.சு.ஜெயச்சந்திரன் பயிற்சி ஆலோசர் , அஇகதி, சென்னை, திரு.வி.கல்யாணசுந்தரம், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அஇகதி, சென்னை, திரு.ஜி.ஜெயக்குமார், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், அஇகதி, கிருஷ்ணகிரி,   அரசு உயர்நிலைப்பள்ளி, பாலவாடி தலைமையாசிரியர் திரு.நடராசன் அவர்கள்  நூறு சதவீத இலக்கை அடைவது எப்படி என தன் அனுபவத்தை தலைமையாசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார்.


               இப்பயிற்சி பணிமனை வளாகத்தில் 4 பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப கோளரங்கம் காண்பிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கோளரங்கத்தை கண்டு மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இறுதியாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர்.தனசேகரன் அவர்கள் நன்றியுரை வழங்க இப்பயிற்சி இனிதே நிறைவுற்றது.


Thanks to RMSA DPC, Dharmapuri.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive