Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வர்கள் வழக்கின் சிறப்புத் தொகுப்பு


            முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில்,பி வரிசை வினாத்தாளில்40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு உத்தரவிட்டார்.


           இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர்,இயக்குநர்,டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர்.

            ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்திய முதுகலை ஆசிரியருக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப்பாடத்தில் 31 ஆயிரத்து 983 பேர் எழுதியுள்ளனர்.ஏ,பி,சி,டிஎன நான்கு பிரிவாக வழங்கப்பட்ட வினாத்தாளில் பிவரிசையில் 8,002 பேர் எழுதியுள்ளனர்.நான்கு பிரிவு வினாத்தாளும் ஒன்றே,கேள்விகளின் வரிசையில் மற்றும் மாற்றம் இருக்கும்.இருப்பினும், பி வரிசை வினாத்தாளில் 54 இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன.அதுவும் ங் என்ற எழுத் துது எனவும், ழ் என்பது துணைக்காலாகவும் அச்சிடப்பட்டுள்ளது.

           தமிழ்ப்பாடத்தில் அதிகமதிப்பெண்ணை எடுத்தவர்,பி வரிசை வினாத்தாளில்தான் எழுதியிருக்கிறார்.அதோடு,அதிக மதிப்பெண் எடுத்த முதல்10 பேரில் 6 பேர் பி வரிசை வினாத்தாளில் எழுதியவர்கள்.

               ஆனால்,இரு தேர்வர்கள் மட்டுமே எழுத்துப்பிழையான 21 கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்கக்கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.இந்தநிலையில்,தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால்,பிழையான 40 கேள்விகளுக்கும் முழுமதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு110 மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இருபரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.இருப்பினும்,இதை தனிநீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.இந்நிலையில்,மறுதேர்வு நடத்துவதால் இந்தப்பணி மேலும் தாமதமாகும்.மேலும், 31ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப்பாடத்தேர்வை ரத்து செய்துவிட்டு,மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும் செலவினத்தை ஏற்படுத்தும்.அதோடு,முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள்,மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச்செய்ய முடியாமல் போகலாம்.

                மறுதேர்வை சில தேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.ஆகவே,மறுதேர்வு உத்தரவைரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

                    இந்த மனுவை விசாரித்த எம்.ஜெயச்சந்திரன்,எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு,தனிநீதிபதியின் உத்தரவுக்குத் இடைக்கால தடைவிதித்தது.

              முதுகலைத் தமிழாசிரியர்கள் தேர்வு முடிவு குறித்து அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில்.வருகின்ற நவம்பர் 12 ந் தேதி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன்எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வர உள்ளது. அன்று எதிர்மனுதாரர்கள் எதிர்மனு தாக்கல் செய்வதுடன் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே சமயத்தில் முதுகலைத் தமிழாசிரியர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தோர் மறு தேர்வுஎன்பது தங்களது பலமாத உழைப்பினால் கிடைத்த பலன் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாத நிலையினை ஏற்படுத்தியுள்ளது என்பதால் வழக்கினில் தங்களையும் இணைத்துக்கொண்டு தங்கள் தரப்பு வாதத்தையும் முன் வைக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.இதற்கிடையில் நடைபெற்ற முதுகலைத் தமிழாசிரியர் தேர்வில் முதல் இடத்தை பி பிரிவில் தேர்வு எழுதியவர்தான் பெற்றுள்ளதாகவும் அப் பிரிவில் தேர்வு எழுதியோர்8,002பேரின் சராசரி மதிப்பெண்ணுக்கும் மற்ற ஏ,சி,டி பிரிவினரின் சராசரி மதிப்பபெண்ணுக்கும் வித்தியாசம் மிகமிகக் குறைவே என டிஆர்.பி தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளதாகவும் தெரிகின்றது. அத்தேர்வில் முதல் மதிப்பெண் 120 ஐ ஒட்டியே உள்ளதாகவும் சுமார் 20பேர் மட்டுமே 150 மதிப்பெண்களுக்கு 110 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் எனவும் . தேர்வு முடிவு அதனடிப்படையில் வெளியிடப்பட்டால் கட்ஆப் மதிப்பெண் வெகுவாகக் குறையக்கூடும் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive