Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சைபர் குற்றங்களைத் தடுப்பதெப்படி? ஹன்ஸா


          பொதுவாக ஒருவர் மீது அவதூறு சொல்லப்பட்டால் அது பொய் எனில் அவர் மீது மான நட்ட வழக்கு தொடர முடியும்.ஆனால், இணையத்தில் அவதூறு சொல்லப்பட்டால், அந்த இணையதள உரிமையாளர் மீதுதான் வழக்கிட முடியும். 
 
          ஆனால், தன் அனைத்து அடையாளத்தையும், IP, Address, MAC Address இவற்றை மறைப்பதன், மாற்றுவதன் மூலம், ஓர் உரிமையாளர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத (Anonymous) இணையதளத்தை உருவாக்கும் சாத்தியக்கூறும் உள்ளது. இந்நிலையில் யார் மீது வழக்கிடுவது..?

            ஒருவரை குற்றவாளி என்று நிரூபித்து தண்டனை வாங்கித் தருவதில் மூன்று பிரச்சினைகள்...

1. ஓர் இணையதளத்தின் உண்மைத்தன்மை.
2. IP Address, MAC Address, இவற்றை மாற்ற முடிவதால், எவிடென்ஸ் இல்லாமை.
3. அந்தப் பிரச்சினையின் பரவெல்லை (jurisdiction). இதுவரை தெளிவான பதில் இல்லை.

ஆனால் இதற்கெல்லாம் என்னதான் தீர்வு..?

இரண்டு பேர் கருத்து சொல்கிறார்கள்:

இண்டர்நேஷனல் நீதிமன்றமோ, ஐக்கிய நாடுகள் சபையோ தலையிட வேண்டும்"
ஆண்டன் ப்ரகாஷ் , Entrepreneur/ Tech Columnist

            இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் ஏதும் இருந்தால், ஒரு நாடு, குற்றவாளியை வைத்திருக்கும் நாட்டிடம், விண்ணப்பம் செய்து அந்தக் குற்றவாளியைப் பெற்று இண்டர்நேஷனல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம்.

           ஆனால், அப்படி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாதிருப்பின், அந்த இரு நாடுகளும், அவற்றின் வியாபார ஒப்பந்தங்களின் அடிப்படையில் அதைச் செய்யலாம் அல்லது ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகள் அதில் தலையிட்டு, நீதி பெற உதவலாம்" என்கிறார்.

சர்வீஸ் ப்ரொவைடரே பொறுப்பேற்கும்படி செய்ய வேண்டும்"
ப்ரகாஷ் எம் ஸ்வாமி, Diplomatic Correspondent at United Nations, நியூயார்க், USA

           ஆண்டன் சொல்வது சரியாக இருப்பினும், இண்டர்நேஷனல் சட்டங்கள், இரு நாடுகளுக் கிடையேயான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நிலையில் இருக்க, இதே இணைய பிரச்சினை, இரு வெவ்வேறு நாட்டு தனி நபர்களுக்கிடையே நடந்தால் அதன் ஜூரிஸ்டிக்ஷன் எது எனக் கேள்வி எழுகிறது. எனவே, ஓர் இணைய சர்வீசை அது வலைப்பூ, இணையதளம், மின்னஞ்சல் முகவரி என எந்த சர்வீஸ் வழங்கினாலும் அந்த சர்வீஸ் ப்ரொவைடரிடம் ஒவ்வொருவரின் முழு தகவலும் இருக்க வேண்டும். இதற்கு சர்வீஸ் ப்ரொவைடரை இதற்குப் பொறுப்பேற்கும்படி செய்ய வேண்டும்.

            ஒரு குடும்ப அட்டை, வங்கிக் கடன் வாங்க வேண்டுமென்றால் கூட, அதற்கு ஏகப்பட்ட அடிப்படைத் தகவல்கள், ஆதாரங்கள் தர வேண்டி இருக்கையில், எந்தவிதக் குற்றமும் இதை வைத்து செய்ய முடியும் எனும் நிலையில் இருக்கும் வெப் சைட், இ மெயில், ப்லாக் போன்ற இணைய சேவைகளைப் பயன்படுத்த, பெரிதாக எந்தத் தகவலும் கேட்கப்படுவதில்லை. அதில் உண்மையை மறைக்கவும் முடிகிறது.

                ஆக, ஓர் இணையதளத்தின் source மற்றும் அதன் ஜுரிஸ்டிக்ஷன் பற்றி திட்டமிட முடிந்தாலும், அனைத்துமே, அதன் எவிடென்ஸ் எனும் டெக்னாலஜியில் தொக்கி நிற்கிறது."

நீங்கள் சென்னையில் வசித்தால், சைபர் குற்றங்களுக்குத் தொடர்புகொள்ள:

Assistant Comissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore, Chennai - 600 008
Telephone number : 55498211
cyberac@rediffmail.com

CHENNAI FOR REST OF TAMIL NADU

Cyber Crime Cell
CB, CID, Chennai.
Off: 25393359, cbcyber@tn.nic.in

<mailto:cbcyber@tn.nic.in




1 Comments:

  1. Congrats Hansa..! for your effort to create awareness on cyber crimes ..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive