NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 5 நாட்களில் முடிகிறது

 
            "தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிந்த பின், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும்" என தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பத்து லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். ஒரு மாணவருக்கு, ஏழு தேர்வுகள் வீதம், 70 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டி உள்ளது.
 
           தமிழகத்தில், 12 ஆயிரம் பள்ளிகளில் இருந்து பாட வாரியாக, ஐந்து ஆசிரியர்கள் வீதம், 60 ஆயிரம் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்த உள்ளோம்.

            ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு, 30 விடைத்தாள் திருத்துவார். அதன்படி ஒரு நாளில், 18 லட்சம் விடைத்தாள்களை திருத்த முடியும். அதிகபட்சமாக, ஐந்து நாளுக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிப்போம். தேர்தல் பணி பயிற்சி வகுப்பில், ஆசிரியர் பங்கேற்க இருப்பதால், தேர்தலுக்குப் பின், பணியை துவக்கி, ஏப்ரல் இறுதிக்குள் முடித்து விடுவோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

         வழக்கமாக, விடைத்தாள் திருத்தும் பணி 15 அல்லது 20 நாள் என இழுவையாக நடக்கும். ஆனால் இந்த ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணியை, விரைந்து முடிக்க அதிக ஆசிரியர்களை, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தி இயக்குனர் நடவடிக்கை எடுத்து உள்ளார். இதனால், தேர்வு முடிவும், விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளது.

            தேர்வு மையங்களில் இருந்து, விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில், முன்னணி தனியார் பார்சல் நிறுவன வாகனங்களை, தேர்வுத்துறை ஈடுபடுத்தி வருகிறது. "கடந்த ஆண்டு, இந்த பணிக்காக, 2.8 கோடி ரூபாயை, அஞ்சல் துறைக்கு, தேர்வுத்துறை வழங்கியது. தற்போது, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த ஆண்டு செலவு குறையும்" என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.




2 Comments:

  1. language i & ii
    english i & ii
    maths
    science
    s.science

    so
    7 papers x 12000 = 84000 teachers need

    ReplyDelete
  2. ஐயா,
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ் முதல் தாளில் 44-வது கேள்வியாக, “இன்னா செய்யாமை குறித்துக் காந்தியடிகள் கூறியது யாது?”
    என்ற கேள்வி கேட்கப் பட்டுள்ளது. ‘காந்தியம்’ என்ற உரைநடைப் பகுதியில்
    இன்னா செய்யாமைக் குறித்துக் காந்தியடிகள் கூறியதாக தெளிவான எந்தக் கருத்துக்களும் இல்லை.

    ஆனால், இன்னா செய்யாமை என்ற ஒரு துணைத் தலைப்பின் கீழ்
    அவரை சிறையில் அடைத்தவருக்கு அன்பளிப்பு வழங்கிய ஒரு நிகழ்ச்சிதான் கூறப்பட்டுள்ளது. அதையே மாணவர்கள் பலரும் விடையாக எழுதியுள்ளனர்.
    எனவே, இதனை தங்கள் இணையதளம் வழியாக தேர்வுத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive