Home »
» 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்தப் பள்ளியிலேயே நடத்த மதுரைக்கிளையில் மனு.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்தப் பள்ளியிலேயே எழுத அனுமதிக்க
வேண்டும் என மதிமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் உயர்நீதிமன்ற
மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தேர்வை மற்ற பள்ளியில் சென்று
எழுதுவதால் மாணவர்களுக்கு மன உளைச்சல் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்வு எழுதச் செல்லும் போது விபத்தில் சிக்கி மாணவர்
உயிரிழக்கின்றனர். மாணவர் உயிரிழப்பை தடுக்க அந்தந்தப் பள்ளியிலேயே தேர்வு
நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
நீதிபதிகள் தனபாலன், வேலுமணி அமர்வு விசாரித்தது மேலும் இந்த மனுவை தனி
நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...