Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?


         சிதம்பரத்தில் நடந்த தினமலர் மற்றும் கல்விமலர் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழாவில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

பூபதி (இயற்பியல்)

ஒரு மதிப்பெண் பொறுத்தவரை, இதுவரை வந்துள்ள 26 வினாத்தாள்களுக்கு இடையே தயார் செய்வது நலம். மொத்தமுள்ள 135 தன்னறிவு வினாக்களுக்கு விடைகளை தயார்படுத்த வேண்டும். 3 மதிப்பெண் பொறுத்தவரை பாடம் 2, 9ல் உள்ள வினாக்களுக்கு விடைகளை தயார்படுத்த வேண்டும். மேலும், 4 கணக்குகள் வரும். இதற்கு பாடம் 1, 4, 6, 8 ஆகியவைகளை தயார்படுத்த வேண்டும்.


5 மதிப்பெண் பொறுத்தவரை பாடம் 2, 7ஐ தயார் செய்தால் 4 கேள்விகளுக்கு விடை எழுதலாம். கண்டிப்பாக போட வேண்டிய கணக்கிற்கு பாடம் 5, 8, 3, 4, 1 ஆகியவற்றில் உள்ள கேட்கப்பட்ட கணக்குகளை தயார்செய்ய வேண்டும். 10 மதிப்பெண் பொறுத்தவரை 1, 4, 8, 5 அல்லது 6 இவற்றில் உள்ள கேள்விகளுக்கு விடைகளை தயார் செய்தால் 40 மதிப்பெண் சுலபமாக பெறலாம்.

பாரி (வேதியியல்)

வினாத்தாள் வடிவமைப்பை தெரிந்திருப்பது அவசியம். சமன்பாடுகளை எழுதிப் பழக வேண்டும். குறைவான பாடப் பகுதிகளுடன் அதிக மதிப்பெண் கொண்ட பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தன்மதிப்பீட்டில் உள்ள 1 மதிப்பெண் வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 3 மதிப்பெண் வினாக்களை நன்கு மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

கரிம வேதியியலில் உள்ள வினை வழி முறைகளையும், பெயருள்ள வினைகளையும் தயார்படுத்த வேண்டும். வேறுபாடுகள் மற்றும் கரிம சேர்ம மாற்ற வினைகளைக் கொண்ட வினாக்களை படிக்க வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் சங்க வினா-வங்கி புத்தகத்தை மீள்பார்வை செய்வது நலம்.

ஸ்ரீதரன் (கணக்கு)

பாட புத்தகத்தில் பின் பகுதியில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை தயார் செய்வதன் மூலம் 30 முதல், 32 மதிப்பெண் வரை கிடைக்கும். 1, 2, 9 ஆகிய பாடங்கள் மற்றும் புத்தகத்தில் பின் பகுதியில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி மூலம் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெறலாம். 1, 2, 3, 4, 9 ஆகிய பாடங்களில் கவனம் செலுத்தினால் 150 மதிப்பெண்களுக்கு மேல் பெறலாம்.

நிறைய மாதிரி தேர்வுகளை எழுதுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பிட்ட வகை கணக்குள் எல்லாம் அனைத்து ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக பொதுத் தேர்வில் கேட்கப்பட்டு வருகிறது. அத்தகைய கணக்குகளை மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பதன் மூலம் சிறிய தவறுகள் இன்றி முழு மதிப்பெண் பெறலாம்.

முத்துக்குமரன் (உயிரி தாவரவியல்)

புத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களுக்கும் விடை எழுதிப் பழக வேண்டும். அறிவியல் பெயர், குடும்பப் பெயர், ஆசிரியர் பெயர், தமிழ்ப் பெயர், ஆண்டுகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். 3 மதிப்பெண் வினாக்களுக்கு 1, 2, 5 பாடங்களில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் பயிற்சி பெற வேண்டும்.

ஐ.சி.வி.என்., விதிமுறைகளை நன்கு படிக்க வேண்டும். 4 குடும்பங்களில் வகைப்பாட்டு நிலை, மலர் வாய்ப்பாடு, மலர் வரைபடம் ஆகியவற்றை பயிற்சி செய்ய வேண்டும். கட்டாய வினா எந்த பாடத்தில் இருந்தும் கேட்கலாம். 10 மதிப்பெண் வினாக்களுக்கு 1, 5ம் பாடங்களை நன்கு படிக்க வேண்டும். ஹார்மோன்களின் வாழ்வியல், விளைவுகள், பொருளாதார முக்கியத்துவம் ஆகியவற்றை நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.

ராமமூர்த்தி (உயிரியியல்)

மனித உடல் செயலியல் பாடத்தில் முதல் பாதி (நரம்பு ஒருங்கிணைப்பு) அல்லது 2வது பாதி என ஏதாவது ஒன்றை நல்ல முறையில் படிக்க வேண்டும். கட்டாய வினா (கேள்வி எண் 31) நோய் தடை காப்பியல் பாடத்தில் கேட்கப்படும். இப்பாடத்தை படிப்பது சிறந்தது. கற்கால மரபியல் (4வது பாடம்) மூன்று மதிப்பெண் வினாக்கள் 3 கேட்பதால் இப்பாடத்தை விரிவாக படிக்க வேண்டும்.

இந்த பாடத்தில் மட்டும் 16 மதிப்பெண்ணிற்கு வினா கேட்கப்படும். சுற்றுச்சூழல் அறிவியல் அல்லது பயன்பாட்டு உயிரியியல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும். இதில், 10 மதிப்பெண் வினா கண்டிப்பாக வரும். 3 மதிப்பெண் வினாக்களுக்கு 2, 3, 4, 7 பாடங்களைப் படிக்க வேண்டும். உயிரியியல் பாடத்தைப் பொறுத்தவரை படம் வரைதல் முக்கியம். பாகம் குறிப்பது அவசியம்.

சவுந்தர பாண்டியன் (கணினி அறிவியல்)

கணினி அறிவியலில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 75 கேட்கப்படுவதால் புத்தகம் முழுவதும் படிக்க வேண்டும். பாடங்களை படிப்பது மட்டுமின்றி அதில் அதிக செய்முறை பயிற்சிகளை கணினியில் செய்து பார்த்தால்தான் அதிலுள்ள கட்டளைகளை முழுமையாக நினைவில் கொள்ள முடியும். ஸ்டார் ஆபீஸ் பாடப்பிரிவில் இருந்து 45 சதவீத மதிப்பெண்களும், சி++ போன்ற பகுதியில் இருந்து 55 சதவீத மதிப்பெண்களும் கேட்கப்படும். ஸ்டார் ஆபீஸ் பிரிவில் முழுமையாக படித்தால் 80 மதிப்பெண் எளிதாக பெறலாம். தொகுதி 2ல் உள்ள சி ++ ல் இருந்து 95 மதிப்பெண்களுக்கு வினா கேட்கப்படும். 3, 4, 7, 8, 9 ஆகிய பாடங்களில் இருந்து மட்டுமே தலா 5 மதிப்பெண் வினா கேட்கப்படும்.

சிவராம ரெட்டி (வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல்)

இப்பாடத்தில், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே, 200க்கு 200 மதிப்பெண் பெற முடியும். கணக்குப் பதிவியலில் சரியான கேள்வியை தேர்வு செய்து எழுத வேண்டும். வணிகவியலில் தேர்வு செய்யும் கேள்விகளுக்கு நேரடியாகவும், சுருக்கமாகவும் பதில் அளிக்க வேண்டும்.

இந்த பாடத்தில், கணக்கு பதிவியலிலுள்ள முதல் பகுதியில் அனைத்து பாடங்களையும், இரண்டாவது பகுதியிலுள்ள கருத்தியலை (தியரி) முழுமையாக படித்தால், முழு மதிப்பெண் பெறலாம். திரும்பத் திரும்ப போட்டு பார்த்து பயிற்சி எடுத்தால் தான் அதிக மதிப்பெண் பெற முடியும்.

இலியாஸ் டேவிட் (பொருளியியல்)

இப்பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற 1, 3, 4, 8, 9, 11வது பாடங்களை படிக்க வேண்டும். நெடுவினா 20 மதிப்பெண்களுக்கு வரும். பத்தி வினாவுக்காக 7, 10, 12, பாடத்தில் இரண்டு பத்தி வினா (10) வினா கேட்கப்படும். 2, 5, 6, 8 பாடங்களில் ஒவ்வொரு பத்தி வினாக்கள் வரும். 3 மதிப்பெண் பொறுத்தவரையில் பாடம் 8ஐ தவிர எல்லாவற்றையும் படிக்க வேண்டும். 50 ஒரு மிதிப்பெண் எடுக்க கண்டிப்பாக பொருளியியல் புத்தகத்தில் பாடத்திற்கு கடைசியில் உள்ளவைகளை படித்தால் போதும்.

தேவக்குமார் (வரலாறு)

இந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற 1 முதல் 20 பாடம் வரை (இந்திய வரலாறு) படித்தால் போதும். உலக வரலாற்று பகுதியில் முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், பன்னாட்டுக் கழகம், ஐ.நா., சபை மற்றும் கெடுபிடி போர் , பிரரெஞ்சு புரட்சி ஆகிய பாடங்களைப் படிக்க வேண்டும். 3 மதிப்பெண் வினாக்களுக்கு 3 குறிப்புகளும், 6 மதிப்பெண் வினாக்களுக்கு 6 குறிப்புகளும், 10 மதிப்பெண் வினாக்களுக்கு 15 குறிப்புகள் மட்டும் எழுதினால் போதும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive