Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா...?

 1) கையெழுத்துப் போட்டு விட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்...

நீங்கள் தைரியமானவர்கள். நல்லவர் தான் ஆனால், கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. ,

சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே..

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...

ரொமான்டிக் பார்ட்டி. உடை மாற்றுவது போலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள். மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள்.

அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..


3) கையெழுத்துக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...

கூல் பார்ட்டி. சிம்பிளாக இருப்பீர்கள். பிடிக்காதவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..

4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ, கோடோ கிடையாதா ?

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தான். அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். இதில் பாரக் ஒபாமா இருப்பார் ..

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...

கமுக்க பார்ட்டி நீங்கள். உங்களிடம் நம்பி ரகசியம் சொல்லலாம். கொஞ்சம் புத்திசாலியும் கூட. 
இந்த ஸ்டைலின் கீழ் மர்லின் மன்றோ, கபில்தேவ்..இருப்பவர்கள்.

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால், கோழி கிண்டிய மாதிரி புரியாத கையெழுத்துப் போட்டால்...

புத்திசாலி பார்ட்டிகள். ஆனால், யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள். ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .
இதில் இந்திரா காந்தி, டாக்டர் ஜாகிர் ஹுசேன் .. அடங்குவர்.

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்...

நல்லவர். ஆளுக்கும், சூழலுக்கும தகுந்த மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள். ஆனால், உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள். பில் கிளிண்ட்டன்,

மன்மோகன் சிங் இதில் அடங்குவர் ..

8.) வெறுமனே பெயரை எழுதி வைத்தால்...

அம்மாஞ்சி. பாசமாகவும், உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள். இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..

9) கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம் போடுவீர்களா?

ஓல்டு பார்ட்டிகள். பாரம்பரியக்கலை பிடிக்கும். முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி. சர்.சி.வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?

படிச்சது போதும். இதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்...




3 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive