Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

☉புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?

தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

☉குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?
தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும்.
மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

☉விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

☉ விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
( விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம். )

தேவையான ஆவணங்கள் :

1. இருப்பிட சான்று

2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை

3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் [ இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை ]

4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் [ TSO ] பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான ‘குடும்ப அட்டை இல்லா’ சான்று.

6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.

7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

☉மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?
1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.

2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.

3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

☉ புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
ரூ 5 /- கட்டணம் நிர்ணயித்து. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி [ DSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட உணவு வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive