Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

VAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

       தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய VAO தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது தெரிந்துகொள்ள

     தேர்வான நண்பர்கள் ஜனவரி இறுதிக்குள் பணிநியமணம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது. வாழ்த்துக்கள் நண்பர்களே!

                  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர்எழுதினர். இவர்களில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 506 பேரின் மதிப்பெண்கள், தரவரிசை எண் ஆகியவையும் வெளியிடப்பட உள்ளது. பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியானதரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு என வெவ்வேறு நிலையையும் தேர்வர்கள், தங்களது பதிவு எண்ணை குறிப்பிட்டு அறிந்துகொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் 27ம் தேதி தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதற்கானபட்டியலும் முடிவுகள் வெளியிடப்படும் போது வெளியாகும்.



கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 7½ லட்சம் பேர் எழுதிய கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு

கடந்த ஜூன் மாதம் கிராம நிர்வாக பணியாளர் பணி நியமன தேர்வு நடைபெற்றது. 7½ லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு முடிவை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்
தமிழ் நாட்டில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரின் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வு நடத்தி அதற்கு உரிய நபர்களை தேர்ந்து எடுத்து வருகிறது.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக பணியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தேர்வு நடந்து பல மாதங்கள் ஆனதால் எப்போது தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டதற்கு டிசம்பர் 15-ந்தேதிக்குள் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் குரூப்-2 தேர்வு முடிவும் வெளியிடப்படும் என்று கூறினார். அவர் கூறியபடி குரூப்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நேற்று கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவும் வெளியிடப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
வெளியீடு
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் 7,63,880 பேர் எழுதியதில் 6,71,506 பேர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை. வகுப்பு வாரியான தரவரிசை நிலையும். சிறப்புப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்ப தகுதி, இனம், சிறப்புப்பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்த்தல்
சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரியவந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் தரவரிசை நிலை காலியிட நிலை மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேற்படி தேர்வில் கலந்து கொண்டு, இப்பதவிக்கான அறிவிப்பில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.




10 Comments:

  1. தேர்வுபெற்ற அனைவருக்கும்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பாடசாலை ஆசிரியரே...என்னுடைய
    வரலாறு சம்பந்தமான முக்கிய குறிப்புகள் ஏன் பதிவாகவில்லை..

    ReplyDelete
  3. வரலாறு பாடம் சம்பந்தமான குறிப்புகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் குறிப்புகள் பதிவாகமல் போனது எதனால் என தெரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் தங்களின் குறிப்புகளை நமது பாடசாலை வலைதளத்தின் இமெயில் ஐ.டி. padasalai.net@gmail.com க்கு அனுப்பி வைத்தால் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வாசகர்களுக்கு வழங்க இயலும்.

      நன்றி!
      அன்புடன் - பாடசாலை.

      Delete
  4. Good evening friends. What are the courses BT assistant has to Study to get second incentive? Please reply friends!

    ReplyDelete
    Replies
    1. 1st Incentive for = PG,
      2nd Incentive for = M.ED., (or) M.Phill.,

      Delete
  5. i missed my roll number any one know how to find plz give a missed call 9487421814 plz

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive