Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பம் விற்பனை துவக்கம்.

        சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2015 - 16ம் கல்வி ஆண்டுக்கான, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கின.பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, நிர்வாக சிறப்பு அதிகாரி சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கி, முதல்விற்பனையை துவக்கி வைத்தார்.
 
        சேர்க்கை விண்ணப்பங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகநிர்வாக அலுவலகம் மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் அனைத்து படிப்பு மையங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. விண்ணப்பத்தின் விலை, 400 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதை, பதிவிறக்கம் செய்து, அத்துடன் விண்ணப்பத்திற்கான கட்டண, 'டிடி'யை இணைத்து, பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் ஜூன் 30ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive