அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆசிரியர் தம்பதி உடல் தானம்

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்களின் படிப்பிற்கு உதவ, அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியர் உடல் தானம் செய்தனர்.சிவகங்கை காளையார்கோவில் அருகிலுள்ள மரக்காத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பெஞ்சமின்,45. இவரது மனைவி சகாயமேரி,39. இவரும், செவல் புஞ்சை அரசு பள்ளியில் ஆசிரியை. 

           இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லுாரிக்கு தங்களது உடலை தானம் செய்தனர். இதற்கான ஒப்புதல் விண்ணப்பங்களை கல்லுாரி உடற் கூறுயியல் துறை இணை பேராசிரியர் பார்த்திபனிடம் வழங்கினர்.பெஞ்சமின் கூறுகையில், “வாழும் போதும் 10 பேருக்கு நம்மால் முடிந்தவரை உதவி செய்ய வேண்டும். வாழ்ந்த பின்னரும் 10 பேருக்கு உதவும் நோக்கில் உடல் தானம் செய்துள்ளோம். இது போன்ற உடல் தானம் மூலம் சிறந்த டாக்டர்களை உருவாக்க முடியும். சிறந்த டாக்டர்களால் மட்டுமே பொது மக்களுக்கு தரமான சிகிச் சையை தர இயலும் என நம்புகிறோம்,” என்றார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive