NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் : 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு; அருண்ஜேட்லி

      2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்து வருகிறார். 
 
         இது மோடி பதவியேற்ற பின் தாக்கலாகும் 3-வது பட்ஜெட் ஆகும். சர்வதேச பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது என்று குறிப்பிட்ட அருண்ஜேட்லி உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளபோது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று பட்ஜெட் தாக்கல் அருண்ஜேட்லி தெரிவித்தார். உலக பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் இந்தியா வளர்ச்சி போக்கில் உள்ளது என்று ஜேட்லி தெரிவித்தார்.

பண வீக்கம் குறைவு
பாஜக ஆட்சியில் பணவீக்க விகிதம் பெருமளவு குறைந்துள்ளது என்று பட்ஜெட் தாக்கல் செய்த அருண்ஜேட்லி தெரிவித்தார். நடப்பு கணக்கு பற்றாக்குறை 18.5-ல் இருந்து 14.5 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்றும் முட்டுகட்டை போடும் அரசியல் நிலவரத்துக்கு இடையே மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அருண்ஜேட்லி தெரிவித்தார். உள்நாட்டு தேவையை நம்பியே இந்திய பொருளாதாரம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது என்று 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண்ஜேட்லி தெரிவித்தார். நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும்  என்றும், இந்தியாவிடம் அந்நிய செலவாணி கையிருப்பு 350 பில்லியன் டாலாக உள்ளது என்றும் ஜேட்லி தெரிவித்தார்.
9 அம்ச இலக்கு
9 அம்சங்களை இலக்காக கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், சமூக நலத்திட்டங்கள், நிதித்துறையில் சிக்கனம், வரிச்சீர்திருத்தத்தை இலக்காக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஜேட்லி தெரிவித்தார்.
விவசாய வருமானம்
2022-க்குள் விவசாய வருமானத்தை இரு மடங்காக உயரத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், வேளாண் திட்டங்களை செயல்படுத்த நபார்டு வங்கிக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அருண்ஜேட்லி தெரிவித்தார்.
நகர்பபுற கழிவுக்கு திட்டம்
தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நகரப்புற கழிவுகளை உரமாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளதார்.
உயிரி உரப் பயன்பாடு
நாடு முழுவதும் 5 லட்சம் ஏக்கரில் உயிரி உரத்தை பயன்பாட்டின் கீழ் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்தார். பருப்பு வகைகள் உற்பத்தியை பெருக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஜேட்லி தெரிவித்தார். மேலும் 28.5 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு புதிதாக பாசன வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 2016-17-ல் வேளாண் திட்டங்களை செயல்படுத்த ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வேளாண் கடன் ரூ.9 லட்சம் கடன்
2016-17-ல் ரூ.9 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அருண்ஜேட்லி தெரிவித்தார். புதிய பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.5 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற தேனி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார்.
இணையதள சந்தை மூலம் பால் விற்பனை
பால் வளத்தை பெருக்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இணையதள சந்தை மூலம் பால் விற்பனை செய்யப்படும் என்றும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.
கிராம சாலைக்கு நிதி
நாடு முழுவதும் கிராமங்களுக்கு இணைப்பு சாலைக்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பட்ஜெட் தாக்கல் செய்த அருண்ஜேட்லி தெரிவித்தார்.
100 நாள் திட்டம் ரூ.38,500 கோடி
100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.38,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அருண்ஜேட்லி தெரிவித்தார்.
கிராமங்களுக்கு மின்வசதி
2018 மே 1-ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்படும் என்று அருண்ஜேட்லி உறுதியாக தெரிவித்தார்.
தூய்மை இந்தியா திட்டம்
தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அருண்ஜேட்லி தெரிவித்தார்.
விமான நிலையத்துக்கு நிதி
செயல்படாமல் இருக்கும் 106 விமான நிலையங்களை மேம்படுத்த தலா ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அருண்ஜேட்லி தெரிவித்தார். மாநில அரசுடன் சேர்ந்து விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார்.
ஏழை குடும்பங்களுக்கு எரிவாயு
ஏழை குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
முதியோருக்கு சிறப்பு காப்பீடு
முதியோர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அருண்ஜேட்லி தெரிவித்தார்.
ரத்த சுத்திகரிப்பு வசதி 
அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் ரத்த சுத்திகரிப்பு வசதி செய்து தரப்படும் என்று பட்ஜெட்டில் அருண்ஜேட்லி தெரிவித்தார்.
ஆதி திராவிடர் நலன்
ஆதி திராவிடர் வகுப்பு தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார்.
அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் கல்வி திட்டத்தை பலப்படுத்த நடவடிக்க மேற்கொள்ளப்படும் என்றும், நாடு முழுவதும் 62 நவோதயா பள்ளிகள் புதிதாக தொடங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அருண்ஜேட்லி தெரிவித்தார். கல்வி சான்றிதழ்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று உறுதி அளித்தார். 
வேலை வாய்ப்பை பெருக்க திட்டம்
வேலைவாய்ப்பை பெருக்க தொழில் முனைவோருக்கு ஊக்குவிப்பு திட்டம் அறிமுகப்படுத்ப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார். புதிதாக வேலைக்கு சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கு சேமநல நிதியில் 8.3 சதவீதத்தை அரசு வழங்கும் என்றும், சேமநல நிதி உதவி திட்டத்தை செயல்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive