7வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களில் 13 பேர் மயக்கம்

           சென்னையில் 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் 13 பேர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சென்னை டிபிஐ வளாகத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிகரித்து தர வேண்டும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 10,000 ஆசிரியர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே பணி, ஒரே கல்வி தகுதி, ஊதியம் மட்டும் குறைவாக வழங்கபடுவது ஏன்? எனஅவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்தப்போவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive