Home »
» கேரள மாணவிகள் பிளஸ் 1 படிக்க தகுதியில்லை : 10ம் வகுப்பில் 35 மதிப்பெண் பெறாததால் அறிவிப்பு .
'10ம்வகுப்பு தேர்வில் 35 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்ற கேரள மாணவிகள்
நான்கு பேர், போடி பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் படிக்க தகுதி இல்லை,' என,
கல்வித் துறை அறிவித்துள்ளது.
கேரளா, இடுக்கி மாவட்டத்தில் தோட்ட தொழிலாளர்களாக வேலை செய்யும்
தமிழர்களின் பிள்ளைகள் அங்குள்ள பள்ளிகளில் தமிழை முதல்பாடமாக எடுத்து
படிக்கின்றனர். இதில் அம் மாவட்ட மாணவிகள் செல்வராணி, ப்ரீத்தா, அபிராமி,
மோகனா ஆகியோர் கடந்தாண்டு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
அம்மாநிலத்தில் பாடவாரியான மதிப்பெண்ணுக்கு பதிலாக, 'ஏ, ஏ- பிளஸ், பி, பி
-பிளஸ், டி -பிளஸ் என தரவரிசை வழங்கப்படும்.
நான்கு மாணவிகளும் 'டி பிளஸ்' தரவரிசை பெற்றனர். இதற்கு 30 முதல் 39
மதிப்பெண் பெற்றதாக கருதப்படும்.
அனுமதி மறுப்பு
இதன் அடிப்படையில் அவர்கள் போடியில் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1
வகுப்பில் சேர்ந்தனர். அவர்களின் மதிப்பெண்ணை ஆய்வு செய்த பள்ளி நிர்வாகம்,
'பிளஸ் 1ல் சேர உரிய மதிப்பெண் பெறவில்லை,' எனக்கூறி கல்வியை தொடர
அனுமதிக்கவில்லை.
கலெக்டரிடம் மனு
'கேரள பாடத்திட்டத்தில் 'டி-பிளஸ்' பெற்றவர்கள் மேல்நிலைவகுப்பு
படிக்கலாம். எனவே தமிழகத்தில் தங்களை பிளஸ் 1ல் தொடர உத்தரவிடவேண்டும்,
என,' கடந்த 25ல் தேனி கலெக்டர் வெங்கடசாலத்திடம் மாணவிகள் மனுக்கொடுத்தனர்.
மதிப்பெண்ணை ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
இதன்படி, கேரள கல்வித்துறையில் மாணவிகள் நால்வரும் 33 மதிப்பெண்
பெற்றுள்ளனர் என துல்லியமாக மதிப்பீடு செய்து வழங்கி உள்ளனர். ஆனால் தமிழக
பாடத்திட்டத்தில் 35 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி பெற்றதாக
கருதப்படும். எனவே, அம்மாணவிகள் தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பு தொடர முடியாது
என, கல்வித்துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...