Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

பள்ளிக் கல்வி அமைச்சரானார் மாஃபா கே.பாண்டியராஜன்

        பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.
          தமிழக அமைச்சரவையில் திங்கள்கிழமை சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, அமைச்சரவையில் இருந்து கே.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கே.பாண்டியராஜன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் கே.ரோசய்யாவுடன் புதிய அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன். உடன், தலைமைச் செயலர் பா.ராமமோகன ராவ்.இதையடுத்து, பாண்டியராஜன் அமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
விழா நடைபெறும் மண்டபத்துக்கு வந்த ஆளுநர் கே.ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலர் ராம மோகன ராவ் ஆகியோர் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து, அமைச்சரான கே.பாண்டியராஜனுக்கு, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, முதல்வரிடம் பாண்டியராஜன் வாழ்த்துப் பெற்றார்.
விழாவைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பொறுப்புகளை ஏற்றார்: இதையடுத்து, தலைமைச் செயலகம் சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தனது அறையில் கோப்புகளைப் பார்வையிட்டு பொறுப்புகளை ஏற்றார்.
அப்போது, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சி.சீனிவாசன், எடப்பாடி கே.பழனிசாமி, பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive