பி.எஸ்சி., நர்சிங் விண்ணப்பிக்க நாளை கடைசி

          பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்,இன்றுடன் முடிகிறது. பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன.
 
         பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பிசியோதெரபி என்ற, மூன்று படிப்புகளுக்கு, சுயநிதி கல்லுாரிகளில், 7,190 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம், 21 அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், ஜூலை, 25ல் துவங்கியது. விண்ணப்பங்களை நேரில் பெறவும், www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும், இன்று கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, நாளை கடைசி நாள். இதில், எந்த மாற்றமும் இல்லை என, மருத்துவ கல்வி இயக்ககம் தெளிவுபடுத்தி உள்ளது.

Share this