Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இலவச மருத்துவக் காப்பீட்டில் செல்வந்தர்கள் தகுதியற்றோருக்கு பலன்; அரசு நிதி வீண்! கண்டறிந்து களைய கணக்கெடுப்பு துவக்கம்!!!

        அரசின் விரிவான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஏராளமான நன்செய், புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், வருமானவரி கணக்கு செலுத்துபவர்கள், அதிக அளவு வருவாய் ஈட்டுபவர்கள், தொழிலதிபர்கள் உள்ளனர்.
 
        அவர்களை கண்டறிந்து களைந்து; ஆண்டுக்கு 80 ஆயிரத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களுக்கு திட்டம் சென்றடைய போலிகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.ஆதார் எண்ணை அனைத்துத் துறையிலும் பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால், தமிழக அரசு, முதற்கட்டமாக வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்தது. தொடர்ந்து சமையல் காஸ் இணைப்பு, வங்கிக் கணக்கு உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியது.இந்நிலையில், மத்திய அரசு, வருமானவரிக் கணக்கில், ஆதார் எண் விபரங்களை இணைக்கச் சொல்லி, சமீபத்தில் உத்தரவிட்டது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.தற்போது அரசுக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடையும் பயனாளிகளில் பலர், ஆண்டு வருவாய், 80 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகவும், பலர் வருமானவரி செலுத்துபவராகவும், ஏராளமான சொத்துக்களை வைத்துக்கொண்டு, அதிக வருவாய் ஈட்டுபவர்களாகவும் உள்ளனர்.அவர்களை காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து விடுவிக்கவும், உண்மையாகவே, 80 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருவாய் ஈட்டுபவர்களுக்கு அரசின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டுத்திட்ட பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் இத்திட்டத்தில் ஆதார் எண் இணைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் துவங்கியுள்ளது.வீடு வீடாகச் சென்று முழுமையாக ஆய்வு மேற்கொள்ள, தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுப் பணியாளர்களும், தனியார் ஏஜன்சியினரும் களமிறங்கியுள்ளனர்.இப்பணியாளர்கள், அரசு காப்பீட்டுத் திட்டத்தில் அங்கம் வகிக்கும் குடும்பத் தலைவரின் பெயர், முகவரி, கல்வித்தகுதி, பணி, மாதந்தோறும் பெறும் சம்பளம், சுய தொழில் செய்தால் அதற்கான விபரம், வருமானவரி செலுத்தியதற்கான படிவம் - 16 ஆகியவற்றுக்கான ஆவணம், ரேஷன்கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், சமையல் காஸ் இணைப்பு எண் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்கின்றனர்.அவற்றோடு, காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள, 'பார் கோடிங்' எண்ணை ஸ்வைப்பிங் இயந்திரத்தில் பதிவு செய்து, தகவல்களை பதிவு செய்கின்றனர்.மேலும், ஆண்டுக்கு, 80 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களே, இத்திட்டத்தில் பயனடைய வேண்டும். அதற்கு அதிகமாக வருவாய் ஈட்டுபவர்கள் தகுதியானவர்கள் அல்ல என்பதை அறிவுறுத்துகின்றனர். 80 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டு வருவாய் ஈட்டுபவர்களாக இருந்தால், அவர்களுக்கு பணம் செலுத்தி பயனடையும், காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து கொள்ள அறிவுறுத்துகின்றனர்.போலிகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு, கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தாலுகாக்களிலும் துவங்கியுள்ளது. 'வீடு வீடாக வரும் காப்பீட்டுத்திட்ட பயனாளிக்கு, உரிய தகவல்களை கொடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது பற்றி தமிழக அரசின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டுத்திட்ட அதிகாரிகள் கூறியதாவது:அரசின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், ஏராளமான நன்செய், புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், வருமானவரி கணக்கு செலுத்துபவர்கள், அதிக அளவு வருவாய் ஈட்டுபவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் உள்ளனர். இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.வசதி படைத்தவர்கள் பலர் இத்திட்டத்தில் இணைந்திருப்பதால், வசதி குறைந்த பலருக்கு இத்திட்டத்தின் பலன் கிடைப்பதில்லை. தகுதியானவர்களுக்கு பலன் போய்ச்சேர வேண்டும்; அரசுக்கு நிதி இழப்பு ஏற்படக்கூடாது. இதற்காக வீடுவீடாக கணக்கெடுப்பு நடத்தவும், தகுதியில்லாதவர்களை தகுதியிழப்பு செய்யவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.இத்திட்டத்தில் தகுதியற்றவர்கள் தாமாக முன்வந்து, அந்த காப்பீட்டுத்திட்ட அட்டையை ஒப்படைத்து திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளலாம். ஆண்டுக்கொருமுறை பணம் செலுத்தி பயனடையும் திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.மேலும் இது குறித்து முழுமையான தகவல் தேவைப்படுபவர்கள், கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் செயல்படும் தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive