Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஸ்டாலினுக்கு போட்டியாக களமிறங்கிய கமல்!

         ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிக்ஸர்களாக அடித்து ஆடி டிரெண்டாகிக்கொண்டிருந்த அதே சமயம், இந்தப்பக்கம் கமல்ஹாசன் தொடர் ட்வீட்களால் ஸ்டாலினுக்கு கடும்போட்டியினை டிரெண்டிங் பக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருந்ததைப் பற்றித்தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

சட்டப்பேரவை முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்டு 1 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டபோது ஸ்டாலின் டிரெண்டிங்கில் இடம்பெற்றார். திமுக, சட்டசபைக்குள் நடந்துகொண்ட விதம் தீயாகப் பரவியது. அதேசமயம் ட்விட்டரில் கமல், வீரமணி ஐயாவுடன் கலந்துபேசாமல் திராவிடர் கழகம் இந்த நேரத்தில் மக்களுக்காக தைரியமாக இறங்கிப்போராடவேண்டும் என்பதை எல்லா திராவிடர்களுக்கும் வலியுறுத்துகிறேன் என்று ஒரு ட்வீட்டைப் பதிவு செய்து ஆரம்பித்துவைத்தார். அந்த ட்வீட்டிலும் சிலர், நான் கங்குலியன், நான் தோனியியன் என்று காமெடி செய்தாலும் ரீ ட்வீட்டும், ஸ்கிரீன்ஷாட்டும் என கமல் பெயர் டிரெண்டிங்கில் ஏறியது.

அடுத்து நெருப்பை பற்றவைத்தது ஸ்டாலின். சட்டப்பேரவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக ஸ்டாலின் வெளியேற்றப்பட்டபோது தமிழகமே அதிர்ந்தது. ஜனநாயகப் படுகொலை என அனைவரும் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்க்குரல்கொடுத்த போது, ட்விட்டரில் கமல் இதோ நமக்கு புதிய முதலமைச்சர் கிடைத்துவிட்டார். Jai de-mockcrazy என்று பதிவு செய்தார். இதில் de-mockcrazy என்று பிரித்து எழுதினார். mock என்றால் கிண்டல் - போலி என்று எந்தப் பொருளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். crazy என்றால் ஆசை வெறி கொண்ட, வெறிபிடித்த என்ற அர்த்தங்களையும் எடுத்துக்கொள்ளலாம். மீண்டும் இந்த ட்வீட் டிரெண்டிங்கில் இடம்பெற்றது. அத்துடன் உங்கள் தொகுதிக்கு வரும் எம்.எல்.ஏ-க்களுக்கு தகுந்த முறையில் வரவேற்பைக் கொடுங்கள் என்ற ட்வீட்டையும் பதிவுசெய்தார். ஏற்கனவே மக்கள், எம்.எல்.ஏ-க்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இன்றைய கடைசி அடியாக மெரினாவில் உண்ணாவிரதம் என ஸ்டாலின் காந்தி சிலையருகே அமர்ந்தது, தமிழக மக்களின் உணர்வுகளைத் தூண்டியது. அதே சமயம் கவர்னரின் மெயில் ஐடியை பதிவுசெய்து Rajbhavantamilnadu@gmail.comங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும் அது அசம்பளியில்ல Governor வீடு என்ற ட்வீட் ஏழாயிரம் பேரால் ஃபேவரிட்டாக மார்க் செய்யப்பட்டு, ஐயாயிரம் பேரால் ரீ ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. இப்படி மாறி மாறி டிரெண்டிங்கில் நடைபெற்ற இவர்களது போட்டியில் தமிழ்நாடு அரசைக் கலைக்கவேண்டும் என்ற #DissolveTNGovt டிரெண்டிங் 1 மணி நேரத்தில் முதலிடத்தைப் பிடித்து, இவர்கள் இருவரது டிரெண்டிங்கையும் தனக்குள் அடக்கிக்கொண்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive