Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Exam 2017 - விண்ணப்ப விற்பனை ஏன் இதுவரை துவங்க வில்லை?

TET விண்ணப்ப விற்பனை ஏன் இதுவரை துவங்க வில்லை?

         மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,) விண்ணப்பங்கள் தயாராக இருந்தும் அவற்றின் வினியோகம் திடீரென நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது.

         ஏப்ரல் கடைசியில் டி.இ.டி., தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முடிவு செய்துள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் சில நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை தேர்வர்களுக்கு வினியோகம் செய்ய கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது.
 

        அனைத்து மாவட்டங்களில் விண்ணப்ப வினியோகம் பிப்.,13ல் துவங்கும் என முடிவு செய்யப்பட்டதால், அதற்கான விற்பனை மையங்கள் தயார் நிலையில் நேற்று வைக்கப்பட்டன. இதற்கிடையே பிப்.,12 இரவு, 'விண்ணப்ப படிவங்களில் குறிப்பிடப்பட்ட விவரங்களில் திருத்தம் செய்யப்படவுள்ளதால் அவற்றை வினியோகிக்க வேண்டாம்.' என டி.ஆர்.பி., அறிவுறுத்தியது. இதனால் நேற்று வினியோகம் நிறுத்தப்பட்டது.
 
        இதனால், முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட வினியோக மையங்களில் 'டி.இ.டி., தேர்வு விண்ணப்ப வினியோகம் தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "விண்ணப்பம் அளிக்கும் கடைசி தேதி பிப்.,28 என தெரிவிக்கப்பட்டது. இதனால் விண்ணப்பங்கள் கிடைத்தவுடன், பிப்.,13 முதல் வினியோகம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை நீடிக்கிறது. விண்ணப்பம் வினியோகம் தேதி விரைவில் அறிவிக்கப்படும்," என்றார்.

- Thanks to Dinamalar - Source Link






1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive