PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Today Rasipalan 1.4.2017

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு,இளமைக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,நீலம்
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும்,கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வீட்டிலும்,வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,கிரே
மிதுனம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்,நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிளிப் பச்சை
கடகம்
எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள்,ப்ரவுன்
சிம்மம்
உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பழைய உறவினர்,நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை,வெள்ளை
 கன்னி
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு,இளம்மஞ்சள்
துலாம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,ரோஸ்
விருச்சிகம்
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை,அணிகலன் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிரே
தனுசு
பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள்,உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு
மகரம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,நீலம்
 கும்பம்
நட்பு வட்டம் விரியும். எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,மயில் நீலம்
மீனம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்
 
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group