NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 24.4.2017

மேஷம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ரிஷபம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
மிதுனம்
உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
கடகம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த கணவன்&மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
சிம்மம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
கன்னி
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
துலாம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
விருச்சிகம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
தனுசு
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
மகரம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தல் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மீனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். புது முதலீடுகளை தவிர்க்கவும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive