NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today 22.9.2017

மேஷம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ரிஷபம்
இன்றையதினம் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
மிதுனம்
எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கடகம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். திடீரென்று அறிமுகமாகுபவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
சிம்மம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
கன்னி
பிற்பகல் மணி 1.28 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
துலாம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் உண்டு. சொந்த-பந்தங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். பிற்பகல் மணி 1.28 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவை. அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
விருச்சிகம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
தனுசு
சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புது வேலை அமையும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
மகரம்
வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
கும்பம்
பிற்பகல் மணி 1.28 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவினங்களை போராடி சமாளிப்பீர்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து மகிழ்ச்சி தங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
மீனம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பிற்பகல் மணி 1.28 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவை. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive