NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 25.9.2017

மேஷம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் ஆசை வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ரிஷபம்
உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
மிதுனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
கடகம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
சிம்மம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
கன்னி
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்படன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
தனுசு
திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்துப் போகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
மகரம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத்தவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கும்பம்
பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர் உதவுவார். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மீனம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். உடல் நலம் சீராகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் புது சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive