Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலூரில் ஜனவரி 6-ம் தேதி நடக்கிறது பாஸ்போர்ட் மேளா!

வேலூரில் ஜனவரி 6-ம் தேதி அன்று சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெறுகிறது. இந்த மேளா, வேலூரில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் நடைபெறும். சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இந்தச் சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்துகிறது.


வேலூர் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம், மற்ற வார நாள்களைப் போல் ஜனவரி 6-ம் தேதி அன்று இயங்கும். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் விண்ணப்பங்கள் வழக்கம் போல் பெற்றுக் கொள்ளப்படும். இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் அனைவரும், பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண்ணை (ஏ.ஆர்.என்.) பெற்றுக் கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மேளாவில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம் கொண்ட ஏ.ஆர்.என். பதிவு எண் தாளை அச்சிட்டு எடுத்து வரவேண்டும். மேலும் தேவையான அனைத்து ஆவணங்களை அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டு வரவேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். இந்த மேளாவிற்கான சந்திப்பு முன்பதிவு ஜனவரி 03, 2018 (புதன்கிழமை) மதியம் 2.30 மணிக்குத் தொடங்கியது.

பாஸ்போர்ட் மேளா நாளன்று, குறித்த நேரத்திற்கான முன்பதிவு நேரம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். காவல்துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) விண்ணப்பங்கள், நிறுத்திவைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் விண்ணப்பதாரர்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் வைத்திருப்போர் மற்றும் மையத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பம் செய்ய வருபவர்கள் இந்த மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive